தூத்துக்குடியில் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள போட்டி! : காமராஜ் கல்லூரியில் கோலாகலமாக நடந்தது
தூத்துக்குடியில் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள போட்டி! : காமராஜ் கல்லூரியில் கோலாகலமாக நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் (தன்னாட்சி) காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில், 550-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
இந்த போட்டியை தூத்துக்குடி மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்க தலைவர் ஏ. பயஸ் பாய், செயலாளர் ஆர். முனியசாமி முரளி, பொருளாளர் வி.ஏ. மெர்சி பத்மாவதி, அமைப்பு செயலாளர் டாக்டர் கே. குப்புசாமி மற்றும் தலைவர் ஜே.வி. அசோகன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
தொடக்க விழாவில், முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை சிவில் சர்ஜன் டாக்டர் ஜே. சைலஸ் ஜெயமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
பரிசளிப்பு நிறைவு விழாவில், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாஸ்டர்ஸ் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
tamilanda