தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சமய நல்லிணக்க நாள் நடைபெற்றது.

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சமய நல்லிணக்க நாள் நடைபெற்றது.

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சமய நல்லிணக்க நாள் நடைபெற்றது.

20.08.2026 அன்று வேதியியல் துறை சார்பாக முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சமய நல்லிணக்க நாள் நடைபெற்றது. வேதியியல் துறைத்தலைவர் முனைவர். ஹெ. கோகிலா சுபத்ரா கிறிஸ்டி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் 

முனைவர் கி.பழநி அவர்கள் இந்து சமயக் கருத்துகள் குறித்து சிறப்பு ரையாற்றினார். முனைவர். ஆ.மரிய சாந்தி, தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர், தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), தூத்துக்குடி அவர்கள் கிறிஸ்தவ சமயக் கருத்துகளை வழங்கினார். முனைவர் மு.சாதிக் அலி, விளையாட்டுத்துறைத் தலைவர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், சதகத்துல்லா அப்பா கல்லூரி (தன்னாட்சி) திருநெல்வேலி அவர்கள் இஸ்லாம் சமயம் சார்ந்த கருத்துக்களைப் பகிர்ந்தார். இந்நிகழ்வின் மூலம் மாணவிகளிடையே ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மனிதநேயம் மற்றும் சமய நல்லிணக்கம் போன்ற உயரிய பண்புகளை வளர்ப்பதை நோக்கமாக் கொண்டு அமைந்தது.

 நிகழ்ச்சி மாணவிகளிடையே “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற உயரிய சிந்தனையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

 வேதியியல்துறை உதவி ப்பேராசிரியர் முனைவர் தே. சண்முக பிரியா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.