தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது
தூத்துக்குடி கோவளம் பசுவந்தனை பகுதி பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் கோவளம் மற்றும் பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக செயல்பட்டு வரும் பாரம்பரிய உப்பு விவசாய நிலங்களை அழித்து குண்டாய் நிறுவனம் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முக்கிய கோரிக்கைகளாக உப்பு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் தூத்துக்குடியின் அடையாளமாகவும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழும் கோவளம் மற்றும் பசுவந்தனை பகுதி உப்பு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் தொழிலாளர் வாழ்வாதாரம் உப்பு விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான உப்பு விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சிறு உப்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு உப்பு விவசாய அழிப்பு நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் பாரம்பரிய தொழில்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதிக்கும் இத்தகைய பெரும் திட்டங்களை தூத்துக்குடி மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ் லாரன்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கே செல்வம் முன்னிலை வகித்தார் கோவளம் பசுவந்தனை பண்பாடு சிறிய அளவு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேகர் சிறப்பு கருத்துரையாற்றினார் மற்றும் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவளித்து கலந்து கொண்டனர் தொடர்ந்து அமைப்பின் முன்னணி நிர்வாகி நிர்வாகிகளான முத்துப்பாண்டி சோழன் பாபு முத்து செல்வம் கங்காதர திலகர் காளிராஜ் சுரேஷ் காந்தி, மதுரை பாலாஜி துரைப்பாண்டி மாரிமுத்து காமராசு பெருமாள் தேவர் கணபதியாதவ் சலீம் கிருஷ்ணன் எட்வின் மற்றும் சரண்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் நிகழ்வு நிறைவாக தூத்துக்குடி மாநகர மாவட்ட இணைச் செயயாளர் ஆகாஷ் வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்
tamilanda