மே 22 தேதி அனுசரிக்கப்படுகிறது. எனவே 15 தியாகிகளின் நினைவை கூறும் விதமாக தமிழக முதல்வர் நினைவு சின்னம் தாங்கிய மணி மண்டபம் அமைக்க வேண்டும். தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர் R. அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடிதம்
மே 22 தேதி அனுசரிக்கப்படுகிறது. எனவே 15 தியாகிகளின் நினைவை கூறும் விதமாக தமிழக முதல்வர் நினைவு சின்னம் தாங்கிய மணி மண்டபம் அமைக்க வேண்டும். தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர் R. அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடிதம்
நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் R. அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது....தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக கடந்த 2018 வருடம் மே மாதம் 22 ம் தேதி நடந்த மாபெரும் மக்கள் திறள் போராட்டத்தில் காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 அப்பாவி மக்கள் பலியானார்கள். அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிட்டது.
மேற்படி துயர சம்பவத்தின் 8ம் ஆண்டு நினைவு நாள் மே 22 தேதி அனுசரிக்கப்படுகிறது. எனவே 15 தியாகிகளின் நினைவை கூறும் விதமாக தமிழக முதல்வர் நினைவு சின்னம் தாங்கிய மணி மண்டபம் அமைக்க வேண்டும்.
மேலும் அரசு நிலத்தில் உள்ள ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து அகற்ற வேண்டும். ஏனென்றால் வேதாந்தா நிறுவன தலைவர் குறுக்கு வழியில் பசுமை முறையில் தாமிர உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நமது தமிழக அரசு எந்த ரூபத்திலும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை நமது மண்ணில் காலூன்ற அனுமதி அளிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
tamilanda