தூத்துக்குடியில் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா: நேச கரங்கள் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது
தூத்துக்குடியில் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா: நேச கரங்கள் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது
தூத்துக்குடி, நவ.19:
முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தனசேகர் நகரில் உள்ள நேச கரங்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஒன்றிய தலைவர் முருகன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ஆறுமுகசாமி, மாவட்டத் துணைத் தலைவர்கள் சாமுவேல் ஞானதுரை, பெத்துராஜ், பேச்சியம்மாள், அனிதா, நகரத் தலைவர் முத்து ரதி, மண்டல் தலைவி டெய்சி, எஸ்சி எஸ்டி பிரிவு மாநில செயலாளர் பிரபு, மகிளா காங்கிரஸ் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முத்து விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வீரையா, கண்ணன், பாலன், ஜெயக்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
tamilanda