அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்.
அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த திருவைகுண்டம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சமூகநல ஆர்வலர் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இந்த போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
சமூக ஆர்வலர் மங்களக்குறிச்சி ப.ராமராஜன், பத்து ரூபாய் இயக்கம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் ஸ்ரீவை சி.முத்து செல்வன்.
வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு :
இந்த பூமி பந்தானது நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால் நிறைந்து காணப்படுகிறது இந்த பஞ்ச பூதங்களின் மூலமாகத்தான் ஒவ்வொரு செயல்பாடுகளும் மாறிக் கொண்டிருக்கிறது இதனால் தான் கால நிலைகளும் மாறுகிறது இந்த மாற்றத்தால் தான் மழை கூட பருவத்துக்கு செய்யாமல் போகிறது வெயில் அதிகமாக அடிக்கிறது என்று சொன்னால் ஓசோன் ஓட்டை பெருசாகி கொண்டு இருக்கிறது இது போன்ற பல கருத்துக்களை பஞ்சபூதங்கள் நமக்கு விளக்கி கூறுகிறது இந்த நிலையில் நிலத்தை கூறு போடுகிறார்கள் நிலத்தை அதிகமாக ஆழமாக தோன்றுகிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகுகிறது
ஸ்ரீமூலக்கரை,பத்மநாபமங்களம், அணியாபரநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள கல்குவாரிகளை டிரோன்(டிஜிட்டல்) அளவீடு செய்யவேண்டும்.
ஸ்ரீமூலக்கரை,அணியாபரநல்லூர் ஆகிய ஊராட்சிமன்றங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற நீர் தானா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.
ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் எத்தனை போர்வெல்கள் அமைந்துள்ளன.எத்தனை இஞ்ச் போர்வெல்கள், அதற்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தகவல் வேண்டும்.
மேற்கண்ட கிராமங்களில் உள்ள கல்குவாரிகள் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை இயங்க அனுமதி உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். அந்த நேரத்திற்குள் மட்டுமே இயங்க வேண்டும்.
அதிக பாரம் ஏற்றி தார்ப்பாய் போடாமல் வரும் லாரிகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.
கனிமங்கள் ஏற்றிச்செல்லும் சரள் மண் தடங்களில் டிராக்டர் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(22-09-2026) முதல் எனது ஊர் வீரன் சுந்தரலிங்கம் நகரில் தனிமனித தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
tamilanda