தப்பு, ராஜ மேளம், கட்டக்குழல் முழங்கிய திருவிழா... தமிழர் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு உயர்த்திய தூத்துக்குடி மேல சண்முகபுரம் இளைஞர்கள்.,*
தப்பு, ராஜ மேளம், கட்டக்குழல் முழங்கிய திருவிழா... தமிழர் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு உயர்த்திய தூத்துக்குடி மேல சண்முகபுரம் இளைஞர்கள்.,*
கோவில் கொடை விழாவில் தமிழ் இசைக்கருவிகளுக்கு முன்னுரிமை இளைஞர்களின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன.!*
தூத்துக்குடி மாவட்டம், மேல சண்முகபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழாவில், பல ஆண்டுகளாக வெளிமாநில இசைக்கருவிகளான செண்டை மேளம், நாசிக் டோல் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளான தப்பு, உறுமி மேளம், பறை, தவில், நையாண்டி மேளம் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த முயற்சியை தமிழன்டா இயக்கம், கலைக்குழு பாராட்டி, இது தமிழ் பண்பாட்டையும் பாரம்பரிய கலைகளையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் சிறப்பான செயலாகும் என்று தெரிவித்துள்ளனர்..
*இது குறித்து தமிழன்டா இயக்கத்தின் நிறுவன தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,* "கோவில் திருவிழாக்களில் சொந்த மண்ணின் இசையும் பண்பாடும் ஒலிக்க வேண்டும். இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, தமிழ் அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, பாரம்பரிய தமிழ் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் துணை நிற்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொடை விழாவில் ராஜ மேளம் கட்ட குழல் மேளம் வாடிப்பட்டி தப்பாட்டம் பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை தொடர்ந்து கடைப்பிடித்து வருவது எளிதான செயல் அல்ல, மேல சண்முகபுரம் இளைஞர்களின் பண்பாட்டு விழிப்புணர்வு மற்ற ஊர்களுக்கும் முன்மாதிரியாக அமைத்துள்ளனர் கோவில் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள்.
விழாவின் சிறப்பம்சங்கள்
கொடை விழாவில் தப்பு மேளக் கலைஞர்கள், உற்சாகமாக இசை நிகழ்த்தியதுடன், வண்ணமயமான அலங்காரங்கள், மின்விளக்குகள் மற்றும் பக்தர்களின் திரளான பங்கேற்பால் விழா கோலாகலமாக நடைபெற்றது.
அதேபோல், ஸ்ரீ பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகம் முழுவதும் பக்தி நிறைந்த சூழல் நிலவியதுடன், இளைஞர்களின் ஒற்றுமையான பங்களிப்பும் விழாவிற்கு சிறப்பு சேர்த்தது.
தமிழர் பாரம்பரிய இசை மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களிலும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
tamilanda