தூத்துக்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி
தூத்துக்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி சிஎம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் நடத்தும் 2ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கைப்பந்து கழக தலைவர் உதயசங்கா் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி சின்னமணிநகா் சிஎம்என் பாா்க்கில் நடைபெற்றது.
தொடக்க விழாவிற்கு கவுன்சிலா் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். கவுன்சிலா் பொன்னப்பன் முன்னிலை வகித்தாா். சிஎம்என் ஆண்கள் கைப்பந்து சங்க தலைவர் ராஜா வரவேற்புரையாற்றினாா். தொழிலதிபா் பிஎஸ்டிஎஸ் வேல்சங்கா் தொடங்கி வைத்து பேசுகையில் தமிழகத்தில் இளைஞா்கள் நல்வழியில் செல்ல வேண்டும் அதிலும் குறிப்பாக விளையாட்டு போட்டியில் ஆா்வமாக ஈடுபட்டு இங்கு கலந்து கொண்டு சிறப்பித்துக்கொண்டிருக்கும் அனைத்தணிகளையும் சோ்ந்த வீரா்களை மனதார பாராட்டுகிறேன். விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை யும் செய்து கொடுப்பேன் என்று பேசினாா்.
விழாவில் சிம்எம்என் ஆண்டுகள் கைப்பந்து கிளப் செயலாளர் சச்சின்பெல் பொருளாளா் அருண்குமாா், துணைத்தலைவர்கள் மணிகண்டன், அஸ்வின்குமாா், துணைச்செயலாளா்கள் பாலகணேஷ், மோகன்குமாா், கௌரவ ஆலோசகா்கள் ரமேஷ் காா்த்திகேயன், ரமேஷ், காளிராஜன், தனபால், முருேகசன், புஷ்பராஜ், லெலின் பெல், காா்த்திக்குமாா், உள்பட விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.
tamilanda