அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்தித்து வாழ்த்து.
அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்தித்து வாழ்த்து.

தூத்துக்குடி ஜூன் 28 : தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று 28.06.2026 அன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட கழகப் பொருளாளர் சேவியர், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், உரக்கடை குணசேகரன், அப்பாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் கே.ஜெ. பிரபாகர், ஜாக்சன் துரைமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, திருச்செந்தூர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் தெர்மல் ஆனந்தராஜ், மாவட்டக் கலை பிரிவு செயலாளர் வீரபாண்டிய பட்டணம் சுரேஷ், வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கோசல்ராம் ராஜா, வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி கவியரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மணிகண்டன், சொக்கலிங்கம், நிர்வாகிகள் குலசை சுடலை, பிராங்கிளின் ஜோஸ், செல்வராஜ், ராஜதுரை, வீரமந்திரகுமார், ஆறுமுகம், ஆனந்தன், சரவணவேல், தங்கதுரை, ராஜசேகர், நாராயணன், பிரேம், ராஜ், ஏசுதாஸ், முருகேசன், சந்தனராஜ், பாலஜெயம், சாம்ராஜ், ஆனந்த், அக்ஷய்லிங்கம், உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
tamilanda