தூத்துக்குடி மாவட்ட காவல் துறை - நகர போக்குவரத்து காவல் - குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட இரண்டு மினிபேருந்துகள் பறிமுதல் - தலா ரூ.15000 அபராதம் - ஓட்டுநர் உரிமம் ரத்து - நடத்துநர்கள் மீதும் குடிபோதை வழக்கு*

thoothukudi-district-police-–-city-traffic-police-–-two-mini-buses-seized-for-dangerous-driving-under-the-influence-of-alcohol-–-fine-of-indian-rupee15000-each-–-driving-licenses-revoked-–-cases-registered-against-conductors-for-intoxication

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை - நகர போக்குவரத்து காவல் - குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட இரண்டு மினிபேருந்துகள் பறிமுதல் - தலா ரூ.15000 அபராதம் - ஓட்டுநர் உரிமம் ரத்து - நடத்துநர்கள் மீதும் குடிபோதை வழக்கு*

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை - நகர போக்குவரத்து காவல் - குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட இரண்டு மினிபேருந்துகள் பறிமுதல் - தலா ரூ.15000 அபராதம் - ஓட்டுநர் உரிமம் ரத்து - நடத்துநர்கள் மீதும் குடிபோதை வழக்கு

????தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *மரு. மதன் I.P.S.,* அவர்கள் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் *திரு. சுனில் T.P.S.,* அவர்கள் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் புதிய பேருந்து நிலையம் அருகில் 11.04.2026 ம்தேதி மாலை பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

????அப்போது அசுர வேகத்தில் வந்த இரண்டு மினிபேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்த போது அதனை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டு அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது. 

????மேலும் நடத்துநர்களை மூச்சு சோதனை செய்த போது அவர்களும் குடிபோதையில் இருந்ததால் அவர்கள் மீதும் குடிபோதையில் பேருந்து இயக்க உடந்தையாக இருத்தல் பிரிவின் கீழ் தலா ரூ.10500 அபராதம் விதிக்கப்பட்டு இரண்டு மினி பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

????தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மேற்படி ஓட்டுநர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.