சுங்கச்சாவடியில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சுங்கச்சாவடி மேலாளர் கைது

a-toll-plaza-manager-was-arrested-following-complaints-that-he-sexually-harassed-female-employees-working-at-the-toll-plaza-via-whatsapp

சுங்கச்சாவடியில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சுங்கச்சாவடி மேலாளர் கைது

சுங்கச்சாவடியில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சுங்கச்சாவடி மேலாளர் கைது               தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சுங்கச்சாவடி மேலாளர் டெல்லியை சார்ந்த அவதேஷ் சிங் (65), என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

தூத்துக்குடி அருகே உள்ளது புதூர் பாண்டியாபுரம் இங்கு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு சொந்தமான சுங்கச்சாவடி அமைந்துள்ளது அதன் அருகே சுங்கச்சாவடி அலுவலகமும் அமைந்துள்ளது இந்த சுங்கச்சாவடியில் ஏராளமான பெண் ஊழியர்கள் சுங்கச்சாவடியில் பில் போடுவது மற்றும் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்த சுங்கச்சாவடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் 

இந்நிலையில் அவதேஷ் சிங் சுங்கசாவடியில் பணிபுரியும் பெண்கள் சிலருக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அங்கு பணிபுரிந்த பெண்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் 

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சுங்கச்சாவடி மேலாளர் அவதேஷ் சிங்கை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்

இதில் அவர் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் சுங்கச்சாவடி மேலாளர் அவதேஷ் சிங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் 

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுங்கச்சாவடி மேலாளர் அவரே சிங் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற என் 3 நீதிபதி விஜய ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்