தூத்துக்குடி சின்னமணி நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இருந்தும் ஆளும் கட்சியினர் துணையுடன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 24 சென்ட் இடத்தை அபகரிக்க தனிநபர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முயல்வதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றச்சாட்டு நடக்கவே முடியாத 81 வயது மூதாட்டி மற்றும் அவரது 83 வயதான கணவர் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக புகார்.

residents-of-the-chinnamani-nagar-area-in-thoothukudi-allege-that-despite-the-existence-of-valid-title-deeds-certain-individuals—acting-with-the-backing-of-the-ruling-party—are-attempting-to-encroach-upon-and-usurp-a-24-cent-plot-of-land-valued-at-several-crores-of-rupees-they-further-complain-that-the-thoothukudi-corporation-administration-is-complicit-in-this-scheme-and-that-the-police-are-intimidating-the-victims—an-81-year-old-woman-who-is-unable-to-walk-and-her-83-year-old-husband—by-filing-false-cases-against-them

தூத்துக்குடி சின்னமணி நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இருந்தும் ஆளும் கட்சியினர் துணையுடன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 24 சென்ட் இடத்தை அபகரிக்க தனிநபர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முயல்வதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றச்சாட்டு நடக்கவே முடியாத 81 வயது மூதாட்டி மற்றும் அவரது 83 வயதான கணவர் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக புகார்.

தூத்துக்குடி சின்னமணி நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இருந்தும் ஆளும் கட்சியினர் துணையுடன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 24 சென்ட் இடத்தை அபகரிக்க தனிநபர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முயல்வதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றச்சாட்டு நடக்கவே முடியாத 81 வயது மூதாட்டி மற்றும் அவரது 83 வயதான கணவர் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக புகார். 

தூத்துக்குடி சின்னமணி நகர் மேற்கு பகுதியில் வேல் என்பவருக்கு சொந்தமான ஐந்து சென்ட் இடம் உள்ளது இதன் பின்புறம் 18 சென்ட் இடம் வேலின் தாயார் மறைந்த லட்சுமி அம்மாள் பெயரில் உள்ளது 

வேலின் 5 சென்ட் இடத்தில் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், தங்கராஜ் வாடகைக்கு கடை வைத்து நடத்தி வந்துள்ளனர் இந்த நிலையில் அந்த இடத்தை எந்தவித ஆவணங்களும் இன்றி அபகரிக்கும் முயற்சியில் ஆனந்தராஜ் மற்றும் தங்கராஜ் ஈடுபட்டுள்ளனர்

இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வேல் இது தொடர்பாக அந்த இடத்தை காவல்துறை துணையுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளார் ஆனால் இதை காவல்துறையுடன் பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் வேல் இடத்தில் அத்துமீறி கடை வைத்து செயல்பட்டு வந்த ஆனந்தராஜ் மற்றும் தங்க ராஜா இவரை அந்த இடத்தை விட்டு அகற்ற நடவடிக்கை எடுக்கவில்ல. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேல் தனக்குச் சொந்தமான இடத்தில் இருந்த கடையை அகற்ற ஜேசிபி இயந்திரம் மூலம் ஈடுபட்டுள்ளார் 

இதைத் தொடர்ந்து ஆனந்தராஜ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் தங்களது இடத்தை வேல் அபகரிக்க முயல்வதாகதென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த நிலையில் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தாமல் வேல் மற்றும் அவரது மகன் முருக சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் 

இந்த நிலையில் வேல் தாயார் மறைந்த லட்சுமி அம்மாள் பெயரில் உள்ள 18 சென்ட் இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என கூறி வேலி அமைத்துள்ளனர் இது தொடர்பாக வழக்கும் நடைபெற்று வருகிறது 

இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தென்பாகம் காவல்துறையினர் 83 வயது முதியவர் வேல் மற்றும் அவரது மனைவி நடக்க முடியாத படுத்த நிலையில் இருக்கும் 81 வயதான மாங்கனி அம்மாள் ஆகியோர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு வேலி மற்றும் இரும்பு கம்பி கேட் ஆகியவற்றை சேதப்படுத்தியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வேல் குடும்பத்தினர் காவல் துறையினர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்களது இடத்தை ஆளுங்கட்சியினர் துணையுடன் தனி நபர்களும் மாநகராட்சி அதிகாரிகளும் அபகரிக்க முயன்று வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். நடக்க முடியாத தனது பாட்டி மற்றும் தாத்தா மீது பொய் வழக்கு போடுவதாக வேலுவின் பேத்தி புகார் தெரிவித்தார் இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார் 

இது தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையர் காந்தி மதியை சந்தித்து வேலுவின் குடும்பத்தினர் உரிய ஆவணங்களை காண்பித்து புகார் அளித்தனர் அப்போது மாநகராட்சி உதவி ஆணையர் காந்திமதி அவர்களிடம் இது மாநகராட்சி இடம் கிடையாது நான்கு அடி பாதை மட்டும் தான் கேட்டோம் என கூறிய வீடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தூத்துக்குடியில் 24 சென்ட் இடத்திற்கு ஆவணம் வைத்திருப்பவர் ஒருவரும் ஆவணம் இல்லாத நபர்கள் சிலரும் என காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆவணம் இல்லாத நபருக்கு சாதகமாக காவல்துறையினர் பொய் வழக்கு பதிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது