வாடகைக்கு விட்ட தனது இடத்தை அபகரிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 83 வயது முதியவர் மாவட்ட காவல் கண்காளர் அலுவலகத்தில் புகார்

வாடகைக்கு விட்ட தனது இடத்தை அபகரிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 83 வயது முதியவர் மாவட்ட காவல் கண்காளர் அலுவலகத்தில் புகார்

தூத்துக்குடியில் வாடகைக்கு விட்ட தனது இடத்தை அபகரிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 83 வயது முதியவர் மாவட்ட காவல் கண்காளர் அலுவலகத்தில் புகார்

தூத்துக்குடி சின்னமணி நகர் பகுதியைச் சார்ந்தவர் வேல் நாடார் 83 வயதான இவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது பேத்தி கிருஷ்ண வேணியுடன் வந்து தான் வாடகைக்கு விட்ட இடத்தை தனக்குத் தெரியாமல் போலியானவணங்கள் தயாரித்து இடத்தை அபரிமிக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

பின்னர் இது குறித்து அவரது பேத்தி கிருஷ்ணவேணி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 60 வருடங்களாக சின்னமணி நகரில் குடியிருந்து வரும் தனது தாத்தா அந்தப் பகுதியில் உள்ள ரெட்டை பாலம் எதிரே மூன்று கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்ததாகவும், அதில் ஒரு கடையை தங்கராஜ் - ஆனந்தராஜ் சகோதரர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்ததாகவும், அந்த இடத்தை நாங்கள் விற்க முயலும் பொழுது போலியான ஆவணங்கள் தயாரித்து அந்த இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதை அறிந்து இது குறித்து நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில் வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது. 

அமீனா மூலம் மேற்படி கடையை காலி செய்து தந்தனர். இந்நிலையில் எங்கள் தாத்தா வேல் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்ததை பயன்படுத்தி தங்கராஜ் மற்றும் ஆனந்தராஜ் மீண்டும் அதே இடத்தில் கடையை திறந்து நடத்தி வந்துள்ளார். மேலும் நாங்கள் அடைத்து வைத்திருந்த தகர செட்டுகள் மற்றும் வேலிகளை அவர்கள் அகற்றியுள்ளனர்.

தொடர்ந்து அவர்களை எழுப்பிய மதில் சுவர் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆப்பில் செய்தோம் அந்த தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வந்தது. அதன் அடிப்படையில் இடத்தை காலி செய்து கொடுக்குமாறு தென்பாகம் காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்தோம் அதற்கு அவர்கள் பப்ளிக் பிராசிக்யூட்டர் ஒபினியன் வாங்கி வாருங்கள் என்றனர்.

அதன் அடிப்படையில் பப்ளிக் பிராசிக்யூட்டர் அந்த இடம் வேல் நாடார் என்பவருக்கு சொந்தமானது தான் என கூறி அதற்கான ஆவணங்களை தந்துள்ளனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து அந்த இடத்திற்கான தண்ணீர் தீர்வை இட தீர்வை ஆகியவைற்றை கட்டி வாருங்கள் நாங்கள் போலீஸ் பாதுகாப்பு தருகிறோம் எனக் கூறினர் அதனடிப்படையில் இடத் தீர்வை தண்ணீர் தீர்வை ஆகியவை நாங்கள் கட்டியும் எங்களுக்கு உரிய உரிய பாதுகாப்பை காவல்துறையினர் வழங்காமல் தென்பாகம் காவல்துறையினர் அந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக எங்கள் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தெரிவித்தார்.