தங்கம் நடுநிலைப் பள்ளியில் சமூக அறிவியல், கணிதம், தையல் கண்காட்சி!

தங்கம் நடுநிலைப் பள்ளியில் சமூக அறிவியல், கணிதம், தையல் கண்காட்சி!

தங்கம் நடுநிலைப் பள்ளியில் சமூக அறிவியல், கணிதம், தையல் கண்காட்சி!

தூத்துக்குடி, அக்.31-

தூத்துக்குடி அண்ணா நகர் 10-வது தெருவில் உள்ள தங்கம் நடுநிலைப் பள்ளியில் இன்று (31.10.2026) 6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சமூக அறிவியல், கணிதம், தையல் பாடம் சம்பந்தமான கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை பள்ளிச் செயலர் R. நவமணி தங்கராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் V. பூசைதுரை முன்னிலை வகித்தார்.

கண்காட்சியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் சா. ஆனந்தி திறந்து வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.

6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், பாடத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இதனை மற்ற வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கணித ஆசிரியை, சமூக அறிவியல் ஆசிரியை மற்றும் தையல் ஆசிரியை ஆகியோர் சிறப்பாக தயார் செய்திருந்தனர்.