உதயநிதி - எடப்பாடி மகன் ரகசிய சந்திப்பு... விஜய்க்கு எதிராக சூழ்ச்சி... பிரபல தொழிலதிபர் உடந்தை..

உதயநிதி - எடப்பாடி மகன் ரகசிய சந்திப்பு... விஜய்க்கு எதிராக சூழ்ச்சி... பிரபல தொழிலதிபர் உடந்தை..

உதயநிதி - எடப்பாடி மகன் ரகசிய சந்திப்பு... விஜய்க்கு எதிராக சூழ்ச்சி... பிரபல தொழிலதிபர் உடந்தை...

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு தமிழக அரசியலில் ஒவ்வொரு சம்பவமாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக அரசியலில் இப்படியும் இருப்பார்களா என்று சொல்லும் அளவுக்கு யாருமே எதிர்பாராத சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றிலே இல்லாத வகையில் முதல்வர் விஜய்க்கு எதிராக திமுக தரப்பு செய்த சூழ்ச்சிகள் ஓவ்வொன்றும் வெளியாகி கொண்டிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகுகிறது, தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றாலும் கூட ஆட்சி அமைப்பதற்கான போதிய பெரும்பான்மை கைவசம் இல்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற திமுக, அதன் தலைவர் முக ஸ்டாலின் வெளிப்படையாக ஒரு அறிக்கை வெளியிடுகிறார், அதில் மீண்டும் உடனே ஒரு தேர்தலை சந்திக்க திமுக விரும்பவில்லை, ஜனநாயகப்படி தவெக ஆட்சி அமைக்க வேண்டும் திமுக எதிர்க்கட்சியாக செயல்படும் என்று தெரிவித்தார் முக ஸ்டாலின்.

ஆனால் வெளியில் மக்கள் மத்தியில் தவெக ஆட்சி அமைக்கட்டும் என்று மக்கள் மத்தியில் தன்னை பெருந்தன்மையான நபராக திமுக காட்டி கொண்டாலும் கூட, விஜய் எந்த சூழலில் முதல்வராக பதவி ஏற்க கூடாது, தமிழ்கத்தில் தவெக ஆட்சி அமைத்து விட கூடாது என்பதில் தீவிரமாக வேலை செய்திருக்கிறது திமுக , இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த துடித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தற்பொழுது அதிமுக இரண்டாக உடைந்து இருக்கும் இந்த சூழலில் , எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி வி சண்முகம், எஸ் பி வேலுமணி ஆகியோர் தலைமையிலானவர்கள் தரப்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, திமுக உடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தார் எடப்பாடி பழனிசாமி அதனால் எங்களுக்கு அவருக்கும் இடையில் பிரச்னை வந்தது என்று சி வி சண்முகம் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

தற்பொழுது சி வி சண்முகம் பேசியது முற்றிலும் உண்மை என்பதும், குறிப்பா விஜய்க்கு எதிரான திமுக சூழ்ச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி துணை போக தயாராக இருந்த தகவல் தற்பொழுது வெளியாகி தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் முதல்வராக பதவி ஏற்க கூடாது எதற்காக அதிமுக உடன் சேர்ந்து திட்டம் திட்ட முடிவு செய்து இருக்கிறது திமுக.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மகன் மீதுன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தேர்தல் முடிவுக்கு பின்னால் ரகசியமாக சந்தித்து பேசிய தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்கட்டும் திமுக வெளியில் இருந்த ஆதரவு தரும் என்று உதயநிதி ஸ்டாலின் ரகசியமாக எடப்பாடி மகன் மீதுன் உடனான சந்திப்பின் போது தெரிவித்து இருக்கிறார்.

மேலும் திமுக - எடப்பாடி தலைமையிலான அதிமுக இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்காக பாசியம் நிறுவனத்தின் ஓனர் பல்வேறு வகையில் உதவி செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மகன் மீதும் ரகசியமாக உதயநிதி ஸ்டாலினை சந்தித்த பின்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து திமுக ஆதரவு தருகிறது நான் தான் முதல்வர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் திமுகவை எதிர்த்து தொடங்கிய அதிமுக எப்படி திமுக உடன் கூட்டணி அமைக்க முடியும் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் பெரும்பாலும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள், தற்பொழுது தமிழக அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக இரண்டு தரப்பும் விஜய் முதல்வராக பதவி ஏற்க்க விடாமல் தடுக்க செய்த இந்த சூழ்ச்சி தகவல் வெளியாகி மிக பெரிய விவாத பொருளாக மாரி இருக்கிறது.