அருஞ்சுணை காத்த அய்யனார் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருஞ்சுணை காத்த அய்யனார் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலப்புதுக்குடி அருஞ்சுணை காத்த அய்யனார் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடி கிராம எட்டுப் பங்கு இந்து நாடார் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட, அருள்மிகு ஸ்ரீ அருஞ்சுணை காத்த அய்யனார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா இன்று (மார்ச் 23) கொடியேற்றத்துடன் மிக விமர்சையாகத் தொடங்கியது.

திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 3 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 4 மணிக்கு மணிக்கு இசையுடன் விழாவுக்கான பூஜைகள் தொடங்கின. காலை 5 மணி மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்கத் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டன. பின்னர், மூலவர் அருஞ்சுணை காத்த அய்யனாருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று பகல் 12 மணிக்கு உச்சிக்காலச் சிறப்புப் பூஜையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 24 முதல் தினசரி பகல் 12 மணிக்கு உச்சிக்காலப் பூஜையும், இரவில் அய்யனார் சப்பர பவனியும் நடைபெறும்.

6-ஆம் நாள் திருவிழா (மார்ச் 28, சனிக்கிழமை): காலை 8:30 மணிக்கு அய்யனாருக்குச் சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு விசேஷ அலங்கார தீபாராதனையும் நடைபெறும். மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

10-ஆம் நாள் சிகர நிகழ்ச்சி (ஏப்ரல் 1, புதன்கிழமை): அன்று காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் சாஸ்தா மூல மந்திர ஹோமம் நடைபெறும். காலை 9 மணிக்கு மேல் பங்குனி உத்திரக் கும்பாபிஷேகம் நடைபெறும். இரவு 1 மணிக்கு உற்சவ அய்யனார் கற்பகப் பொற்ச்சப்பரத்தில் எழுந்தருளி மேலப்புதுக்குடி கிராம வீதிகளில் உலா வரும் கண்கொள்ளாக் காட்சி நடைபெறும்.

பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினசரி இரவு பட்டிமன்றம், இன்னிசைக் கச்சேரிகள் மற்றும் பக்திச் சொற்பொழிவுகள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.