தூத்துக்குடியில் முதல் முறையாக மாநில அளவிலான சிறுவர் செஸ் போட்டி!*

தூத்துக்குடியில் முதல் முறையாக மாநில அளவிலான சிறுவர் செஸ் போட்டி!*

தூத்துக்குடியில் முதல் முறையாக மாநில அளவிலான சிறுவர் செஸ் போட்டி!*

தூத்துக்குடி, அக்.13:

முத்து நகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியில் முதல் முறையாக மாநில அளவிலான சிறுவர் சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.

*'Thoothukudi's 1st Victory'* என்ற பெயரில் நடைபெறும் இந்த போட்டியை பிரீமியர் செஸ் கேர் சென்டர் மற்றும் ரெயின்போ செஸ் அகாடமி இணைந்து நடத்துகிறது. சிபி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் மற்றும் சாட்டர்ன் மல்டி ஸ்போர்ட்ஸ் ஆதரவு அளிக்கின்றன. இது தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட போட்டியாகும் (Event Code: C0179-TUT-26/27).

*போட்டி நடைபெறும் நாள்:* வரும் *18.10.2026 ஞாயிற்றுக்கிழமை*

*இடம்:* டிலைட் பப்ளிக் பள்ளி, மிளாவிட்டான், தூத்துக்குடி (புதிய பேருந்து நிலையம் அருகில்)

*4 பிரிவுகளில் போட்டிகள்:*

8 வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர், 12 வயதுக்குட்பட்டோர் மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 20 பரிசுகள் மற்றும் தூத்துக்குடி வீரர்களுக்கான 5 சிறப்பு பரிசுகள் என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை பங்கேற்க வைக்கும் பள்ளி / அகாடமிக்கு *'பிரீமியர் செஸ் கோப்பை'* விருது வழங்கப்படும் என அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.