தூத்துக்குடி மாவட்ட காவல் துறை - நகர போக்குவரத்து காவல் - குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட மூன்று தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மீது தலா ரூ.15000 அபராதம் - ஓட்டுநர் உரிமம் ரத்து

????தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. மதன் I.P.S., உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் T.P.S., மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் புதிய பேருந்து நிலையம் அருகில் 10.05.2026 ம்தேதி மாலை வாகனச் சோதனை செய்தனர்.

????அப்போது வெளியூர் செல்லும் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் சென்னை செல்லும் மூன்று ஆம்னி பேருந்துகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டு அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது. 

????திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் இருந்து பயணிகளுடன் ஓட்டி வரப்பட்ட மூன்று ஆம்னி பேருந்துகளையும் மாற்று ஓட்டுநர்கள் மூலம் இயக்க அனுமதிக்கப்பட்டது.

????தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மேற்படி ஓட்டுநர்களின் வாகன ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.