அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ சொத்துக்கு தீர்ப்பு இன்று!

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ சொத்துக்கு தீர்ப்பு இன்று!

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ சொத்துக்கு தீர்ப்பு இன்று!

*தூத்துக்குடி, நவ.03:*

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக புகார் எழுந்தது.

தொடர்ந்து, 2006 ல் அமைந்த தி.மு.க., ஆட்சியில், 4 கோடியே 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்தாக அவர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று (நவ.3) தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தூத்துக்குடி நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.