வெள்ளத்தடுப்பு திட்டப் பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெள்ளத்தடுப்பு திட்டப் பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு திட்டப் பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தூத்துக்குடி மாவட்ட நிகழ்வுகள்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் இன்று (27.10.2026) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில் "தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள உப்பாத்து ஓடையினை தூர்வாரும் பணிகளையும், அத்திமரப்பட்டி கிராமத்தில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் இருந்து 24 மதகு வழியாக உபரிநீர் செல்லும் கால்வாய் பகுதிகளையும், குமாரகிரி ஊராட்சி, கூட்டாம்புளி பாலம், பெட்டைக்குளத்தினையும், சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இருவப்பபுரம் கிராமத்தில் உள்ள பேய்குளத்தினையும், பெருங்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பண்டாரவிளை கிராமத்தில் உள்ள பெருங்குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய் பகுதிகளையும், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவகளை குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் பகுதிகளையும், பேரூர் குளம், கஸ்பா குளம் பகுதி, சேதமடைந்த கஸ்பா குளப்பகுதி (ஸ்ரீவைகுண்டம்-வல்லநாடு பத்மநாபபுரம் இணைப்பு சாலை) பகுதி, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளோம். தூத்துக்குடி மாவட்ட நிகழ்வுகள்

இவ்வாய்வு வெள்ளம் பாதிக்கப்படும் தாழ்வான பகுதிகள், குளத்திற்கு வரும் வரத்து கால்வாயினை சீரமைக்கும் பணிகள், பேரிடர் மீட்பதற்கான உபகரணங்களான மின்மோட்டார், மணல் மூட்டைகள், குளங்களில் உள்ள கரைகள் மற்றும் மதகு பகுதிகள் ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து நிலையிலும் தயார்நிலையில் உள்ளோம் என மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தார்.