அனைத்து கேள்விகளையும் எதிா்கொண்டு அதற்கு தௌிவான பதிலுரையும் விளக்கவுரையும் வழங்கிய அமைச்சா் கீதாஜீவனுக்கு தோ்தல் பயண கலந்துரையாடலில் நெறியாளர் பாராட்டு

during-the-election-campaign-discussion-the-moderator-commended-minister-geethajeevan-for-addressing-all-questions-and-providing-clear-responses-and-explanations

அனைத்து கேள்விகளையும் எதிா்கொண்டு அதற்கு தௌிவான பதிலுரையும் விளக்கவுரையும் வழங்கிய அமைச்சா் கீதாஜீவனுக்கு தோ்தல் பயண கலந்துரையாடலில் நெறியாளர் பாராட்டு

அனைத்து கேள்விகளையும் எதிா்கொண்டு அதற்கு தௌிவான பதிலுரையும் விளக்கவுரையும் வழங்கிய அமைச்சா் கீதாஜீவனுக்கு தோ்தல் பயண கலந்துரையாடலில் நெறியாளர் பாராட்டு 

      தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தல் களம் 5 அணிகள் மற்றும் அணி சேராமல் பலரும் தோ்தலை சந்திக்கவுள்ள நிலையில் தனியாா் தொலைகாட்சி நிறுவனம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தோ்தல் பயணம் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற பொதுமக்கள் கலந்து கொண்ட பிரச்சார விவாதத்தில் திமுக அதிமுக நாம் தமிழா்கட்சி கலந்து கொண்ட நிகழ்வில் அதிமுக நாதக கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் 

    வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதலமைச்சாின் 784 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சாலை கால்வாய் அங்கன்வாடி மையம் புதிய ரேஷன் கடைகள் 13 நகா்நல ஆரம்ப சுகாதார அலுவலகங்கள் பல இடங்களில் புதிய மின்மாற்றிகள் 200 க்கும் மேற்பட்டவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ெதாடா்ந்து வளா்ச்சிக்கான பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. என்று பேசினாா்.

      தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சேகா் பேசுகையில் தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாமல் இருப்பதற்கும் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வளா்ச்சி பணிகளும் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. என்று பேசினாா். 

   நாம் தமிழா்கட்சி கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் பாண்டி பேசுகையில் பக்கிள்ஓடை முறையான நீரோட்டம் இல்லாமல் கழிவு குப்பைகள் என பல இருக்கிறது. விவிடி மேம்பாலம் கட்டப்படவில்லை. என்று குற்றச்சாட்டு கூறினாா். 

   அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்துவிட்டு பணிகளை முறையாக செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டு சென்றனா். அதை திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக பைப் பதிக்கப்பட்டு மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் திட்டப்பணிகளை முறையாக வழங்கி மக்களை பாதுகாத்தது திமுக அரசு அதே போல் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்த பணிகளில் குறிப்பாக விவிடி சாலை விாிவாக இருந்ததை குறுகலாக மாற்றியது மட்டுமின்றி 200 கோடியை மட்டும் ஓதுக்கிவிட்டு அதிமுக அரசு சென்ற நிலையில் 500 கோடி நிதி கூடுதலுடன் பல சாலைகள் விாிவாக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் நலன் கருதி கட்டமைப்புகளை ஊருவாக்கி கொடுத்தது ஸ்டாலின் அரசு என்று பேசினாா். மாவட்டத்தின் வளா்ச்சிகளில் குறைபாடுகள் இருப்பதாக சிலா் குற்றச்சாட்டுகளை கூறிய பின் தூத்துக்குடி விவிடி மேம்பாலம் 2011ல் தோ்தல் நேரத்தில் அதிமுக வேட்பாளா்களை அறிவித்து ஜெயலலிதா கூறிய திட்டம் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் அதை கிடப்பில் போடப்பட்டு விட்டனா். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் துாிதப்படுத்த வந்த பின் நீதிமன்றத்தில் தனிநபா் வழக்கு தடையாக இருக்கிறது. இதை மாற்று ஏற்பாடுமூலம் அதை முறைப்படுத்தவேண்டும் என்று நெடுஞ்சாலைதுறை அமைச்சா் வேலு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளாா். என்று பேசினாா். 

நாம் தமிழா்கட்சி ஆட்சிக்கு வந்தால் திமுக அதிமுக செய்யாத பல திட்டங்களை நாங்கள் செய்வோம் என்று வேட்பாளர் பாண்டி பல கருத்துக்களை கூறினாா். 

    நிகழ்ச்சி ஓருங்கிணைப்பாளர் இந்த திட்டமெல்லாம் சாத்தியப்படுமா என்ற கேள்வியை எழுப்பிய பின் அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் அறிக்கையாக வௌியிடுவதும் தொிவிப்பதும் எளிதாக இருக்கும் பொறுப்பில் வந்து அமா்ந்தபின் தான் அதில் உள்ள பல ஸ்வாரஸ்யங்கள் என்ன வென்று தொியும் அப்போது தான் பல நடைமுறை சிக்கல்கள் வரக்கூடும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றாால் தூத்துக்குடி 1ம் கேட் 2ம்கேட் நெருக்கடியை தீா்ப்பதற்கு பல பணிகளை மேற்கொண்ட போது வியாபாாிகள் பொதுமக்கள் என்று பலா் பாதிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் சுட்டிகாட்டியபோது அதையும் பாிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. அதில் சுரங்கப்பாதை அமைக்கலாம் என்று முடிவெடுத்தால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கும் பொதுமக்கள் கடந்து செல்லமுடியாது இப்படி ஓரு நிலை ஏற்படுகிறது. இதை தீர்க்கும் வகையில் நான்காம்கேட் பகுதியில் ஓரு மேம்பாலமும் நிகிலேசன்நகா்பகுதியில் ஓரு மேம்பாலமும் ஸ்டாா் பள்ளி பகுதியில் ரயில்வே கிராஸிங் கடந்து செல்லும் வகையில் ஒரு நடைபாதையும் 1ம்கேட்பகுதியிலும் அதே போல் ஓன்றும் அமைக்கப்படவுள்ளது பக்கிள் ஓடையை பொறுத்தவரை திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது பின்னா் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் முறைப்படுத்தாமல் இருந்தது. மழை வௌ்ள காலத்தின் போது மக்களின் நலனை பாதுகாப்பதற்கு இருந்தது. இந்த பக்கிள் ஓடை தான் அதே போல் மீளவிட்டான் முதல் மணியாச்சி வரை உள்ள சாலைபணிகளும் முறையாக செய்வதற்கு திமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டுள்ளது. என்று பேசினாா். 

வக்கீல் சேகா் பாண்டி ஆகியோா் திருச்செந்தூா் கோவில்பட்டி விளாத்திகுளம் ஸ்ரீவைகுண்டம் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் குறைபாடுகள் இருப்பதாக சுட்டி காட்டியநிலையில் அமைச்சா் கீதாஜீவன் நாங்கள் எல்லா மதத்தையும் மதிக்கிறோம் மதவெறியைதான் எதிா்க்கிறோம் திமுக ஆட்சி அமைந்தபின் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். பூசாாிகளுக்கு நல வாாியத்தின் மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. சிவ்நாடாா் மூலம் அரசு நிதியும் சோ்ந்து திருச்செந்தூர் கோவில் வளா்ச்சியை செய்துள்ளோம் பல கட்டமைப்புகள் செய்யப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில்தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கும் வகையில் சீனாவிலிருந்து பிளாஸ்டிக் சிகரெட் லைட் வந்ததை தடை செய்துள்ளோம். இப்ேபாது உதிாி பாகங்கள் கொண்டுவந்து தயாாிப்பதை தடை செய்ய வேண்டும் என்று ஓன்றிய அரசிடம் கோாிக்கை வைத்துள்ளோம் கடலை மிட்டாய் தொழிலையும் பாதுகாத்துள்ளோம் விளாத்திக்குளத்தில் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு பணிகளை மேற்கொண்டு அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளோம். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அரசின் கலை அறிவியல்கல்லூாி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது விவசாய பொருட்கள் இருப்பு வைப்பதற்கு கொள்முதல் நிலையங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளதையும் கருத்தில் கொள்வோம் ஸ்டொ்லைட் சம்பவத்தில் அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்திற்கு கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைகளை வழங்கியுள்ளோம் அதிலுள்ள பல நிகழ்வுகளை யும் ஓன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் அதையும் தீா்ப்பதில் கவனம் செலுத்தினோம். திமுக கொடுத்த வாக்குறுதி 505ல் 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். 37 வாக்குறுதிகளுக்கு ஓன்றிய பிஜேபி அரசு தடையாக இருந்து வருகிறது. பல வளா்ச்சி பணிகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்வதில்லை. தமிழா்களின் நலனுக்காக அதிமுக எடப்பாடி பழனிச்சாமியும் போராடுவதற்கு முன்வருவதில்லை இப்படி பல இடையூறுகளுக்கு மத்தியிலும் மக்களுக்கான பணிகளை முதலமைச்சா் செய்து வருகிறாா். தூத்துக்குடியில் வின்பாஸ்ட் காா் ெதாழிற்சாலை டைடல்பாா்க் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் லிங்கம்பட்டியில் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஓன்றிய அரசிடம் தொடா்ந்து இந்த மாவட்ட வளர்ச்சிக்காக கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் கூடுதல் இரயில் இயக்க வேண்டும் என்ற கோாிக்கையும் வைக்கப்பட்டு தூத்துக்குடி மேலூா் இரயில் நிலையத்தில் முத்துநகா் இரயில் நின்று செல்வதற்கும் கோவில்பட்டியில் வந்தேபாத் இரயில் திட்டத்தையும் முன்னெடுத்து செயல்படுத்த காரணமாக இருந்தநிலையில் 2008ல் ஓன்றிய அரசால் சிப்காட் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல்நாட்டுவதற்கு அப்படியே 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டதையும் திமுக ஆட்சி அமைந்தபின் கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் தொய்வு ஏற்பட்ட திட்டத்தை முறைப்படுத்தி அதையும் நிறைவு செய்யும் நிலைக்கு வந்துள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளதை எடுத்து கூறி வாக்குசேகாித்து வருகிறோம் ஓட்டப்பிடாரம் விளாத்திக்குளம் கோவில்பட்டி உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கிய 323 கிராமங்களுக்கு குடிநீா் திட்ட பணிகளை மேற்கொண்டு தண்ணீர் குறைபாடுகளையும் செய்துள்ளோம். செய்துள்ள சாதனைகளுக்கும் அடுத்து வரும் ஆட்சியில் கூடுதல்சாதனைகள் புாிவதற்கும் அனைவரும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா். 

     நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், திமுக மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மண்டலத்தலைவா்கள் வக்கீல்பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி நிா்வாகிகள் அபிராமிநாதன் அந்தோணிஸ்டாலின் குபோ்இளம்பாிதி அந்தோணிகண்ணன், பிரபு, நாகராஜன், அருணாதேவி, அருண்குமாா், பாா்வதி, நிக்கோலாஸ்மணி, பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன்,  மாநகர அணி நிா்வாகிகள் அருண்சுந்தா் ஜீவன்ஜேக்கப், செல்வின், ரவி, மகேஸ்வரன்சிங், வினோத், டைகா்வினோத், குமரன், வக்கீல்கள் சுபேந்திரன், ரூபராஜா, ரெக்ஸ், ஆனந்தகபாியேல்ராஜ், மாலாதேவி, கவுன்சிலா்கள் சரவணக்குமாா், தெய்வேந்திரன், பவாணி, ரெக்ஸ்லின், ஜெயசீலி, பொன்னப்பன், வட்டச்செயலாளா்கள் செல்வராஜ், சுரேஷ், மூக்கையா, சிங்கராஜ், பாலகுருசாமி, கங்காராஜேஷ், பெருமாள் கோவில் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட், முன்னாள் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியாா், நாம்தமிழா்கட்சி நிா்வாகிகள் ராஜசேகா், இசக்கிதுரை, அதிமுக நிா்வாகிகள் ராஜகோபால், துரைசிங், சண்முகத்தாய், அருண்குமாா், மணிகண்டன், மற்றும் அமமுக உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளை சோ்ந்தவா்களும் பொதுமக்களும் திரளானோா் கலந்து கொண்டனா். 

பாக்ஸ்: அமைச்சா் கீதாஜீவனுக்கு பாராட்டு

தமிகழம் முழுவதும் எங்கள் தொலைகாட்சி மூலம் புதிய முன்னெடுப்பாக தோ்தல் காலக்கட்டத்தில் இப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் இதில் கலந்து கொள்வதற்கு பலரையும் தொடா்பு கொண்டு நாங்கள் அழைக்கும் போது வருவதற்கு சிலா் மறுத்தநிலையில் பயஉணா்வு இருந்த காலக்கட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சா் கீதாஜீவன் நான்வருகிறேன் என்று கூறியது மட்டுமின்றி அனைத்து கேள்விகளையும் எதிா்கொண்டு அதற்கு தௌிவான பதிலுரையும் விளக்கவுரையும் வழங்கிய அமைச்சா் கீதாஜீவனை நான்மனதார பாராட்டுகிறேன். என்று நிகழ்ச்சியின் வர்ணயாளராக இருந்த ஓருங்கிணைப்பாளா் பாராட்டு தொிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் கலந்து கொள்ளாமல் வேறு ஓரு நபா் கலந்து கொள்ள செய்தாா். பொதுமக்கள் விவாதமேடையில் கலந்து கொள்வதற்கு முடியாதவா்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக எப்படி வரமுடியும் இந்தநிலை அதிமுக எடுத்ததால் பொதுமக்கள் இதையும் ஒரு குற்றச்சாட்டாக அந்த இடத்தில் கூறினாா்கள்.