நேர்காணலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த 15 பேர் கலந்து கொண்டனர்.

fifteen-individuals-who-had-expressed-their-interest-in-contesting-the-thoothukudi-assembly-constituency-on-behalf-of-the-congress-party-participawww????wted-in-the-interview

நேர்காணலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த 15 பேர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கான நேர்காணல் தனியார் ஹோட்டலில் வைத்து  மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நேர்காணலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த 15 பேர் கலந்து கொண்டனர். இவர்களிடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, மாநகர் மகளிர் காங்கிரஸ் தலைவி பிரீத்தி, மகளிர் அணி அமைப்பாளர் முத்துவிஜயா, வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பெத்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்