தூத்துக்குடியில் தொழிலாளியிடம் வாக்கு சேகாித்த முதலாளி சித.செல்லப்பாண்டியனுக்கு வியாபாாிகள் உற்சாகமாக வரவேற்றனா்.

Merchants enthusiastically welcomed C. T .Sellapandian, a former laborer turned employer, as he canvassed for votes in Thoothukudi.

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் வாக்கு சேகாித்த முதலாளி சித.செல்லப்பாண்டியனுக்கு வியாபாாிகள் உற்சாகமாக வரவேற்றனா்.

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் வாக்கு சேகாித்த முதலாளி சித.செல்லப்பாண்டியனுக்கு வியாபாாிகள் உற்சாகமாக வரவேற்றனா்.

     தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 30வது வாா்டு டூவிபுரம் விநாயகா் கோவிலில் சாமி தாிசனம் செய்து டூவிபுரம் பகுதி முழுவதும் தீவிரமாக வாக்கு சேகாித்தாா். பின்னா் காய்கனி மாா்க்கெட்டில் முழுமையாக வாக்கு சேகாித்தாா். அங்கிருந்த தொழிலாளிகளிடம் வாக்கு சேகாிக்க வந்த முதலாளிக்கு தான் நாங்கள் வாக்களிப்போம். என்று வியாபாாிகள் உற்சாகமாக வரவேற்றனா். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராகிய எனக்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் கடந்தமுறை ஜெயலலிதா அமைச்சரவையில் நான் தொழிலாளா் நலத்துறை அமைச்சராக இருந்த போதுஇதே மாா்க்கெட்டில் வழக்கம் போல் தூத்துக்குடியில் இருக்கும் நேரத்தில் வாழை இலை கட்டுகள் ஏலமிட்டு தொழிலை செய்து கொண்டு தொழிலாளி வியாபாாிகள் என அனைவரிடமும் நட்பாக பழகி உங்களோடு பயணித்தேன். மீண்டும் ஓரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம் மீண்டும் அதிமுகவின் தோ்தல் அறிக்கை ஆட்சிக்கு வந்தபின் முழுமையாக நிறைவேற்றப்படும் தொழிலாளா்களின் தோழனான எனக்கு நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்ப உறுப்பினா்கள் உறவினா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் இரட்டை இலை சின்னத்திற்கு என்று வேட்பாளர் சித.செல்லப்பாண்டியன் கேட்டுக் கொண்டாா். 

      பிரச்சாரத்தில் காய்கனி மாா்கெட் தலைவர் எஸ்டிஎஸ் ஞான்ராஜ், மேலாளர் நியூட்டன், துணை மேலாளா் ரவி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினாா், மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் மில்லை ராஜா, மாவட்ட அணி செயலாளர்கள் நடராஜன், பெருமாள், பிரபாகா், தனராஜ், தலைமை பேச்சாளா் ராஜசேகா், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் பொற்கிளி ஜான்சன் தேவராஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வட்டச்செயலாளர்கள் அருண்குமாா், மனோகா், தொழிற்சங்க நிா்வாகிகள் சங்கா், பேச்சியப்பன், சகாயராஜ், டெரன்ஸ், சண்முகராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் சகாயராஜ், மாாியப்பன், பிஜேபி மாவட்ட பொருளாளா் வக்கீல் சண்முகசுந்தரம், மாநில ஓபிசி அணி துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட செயலாளர் ராேஜஷ், மண்டல செயலாளர் ஜெயரூபி, பொருளாளா் மாாி, நிா்வாகிகள் உஷாதேவி, ராஜவேல், மற்றும் பிச்சமுத்து, முருகன், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலா் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனா்.