தூத்துக்குடியில் பழுதடைந்த தந்தி ஆபீஸ் பஸ் ஸ்டாப்: மழைக்காலத்தில் பயணிகள் அவதி! நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

தூத்துக்குடி:* தூத்துக்குடி WGC பிரதான சாலையில் அமைந்துள்ள தந்தி ஆபீஸ் பேருந்து நிறுத்தம் முற்றிலும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மாநகரின் முக்கியப் பகுதியான WGC சாலையில் தினமும் ஏராளமான பயணிகள், மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள இந்த நிறுத்தத்திற்குள் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் மழையில் நனையாமல் ஒதுங்கக்கூட இடமின்றி அவதிப்படுகின்றனர்.

"பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை" என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பயணிகள் நலன் கருதி பழுதடைந்த நிறுத்தத்தை உடனடியாக சீரமைத்து, தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் *எம்.எஸ். முத்து* மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.