ஸ்ரீசித்தர் பீடத்திலுள்ள குரு மகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா கோலாகலம்..!
ஸ்ரீசித்தர் பீடத்திலுள்ள குரு மகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா கோலாகலம்..! : தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில், தென்தமிழகத்தில் எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக சிவபெருமான் குரு மகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஐப்பசி பௌர்ணமி நாளில் குரு மகாலிங்கேஸ்வரரை அன்னாபிஷேகம் செய்து வணங்கினால் வறட்சி நீங்கும், பசுமைவளம் செழித்து பஞ்சம் பறந்தோடும், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகமாகும்.
இதன்படி ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று குரு மகாலிங்கேஸ்வரரான சிவபெருமானுக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அன்னத்தினால் சிறப்பு அபிஷேகம் *"சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர்* தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து குரு மகாலிங்கேஸ்வரர் அன்னாபிஷேகத்துடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க, அன்னாபிஷேக வழிபாடுகள் அனைத்தும் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது.
அன்னாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
ONE TAMIL NEWS | http://www.onetamilnews.com*
tamilanda