திராவிட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அமைச்சராக இருந்து பாராட்டு பெறக்கூடிய அளவுக்கு பணியாற்றி வருபவர். பொது மக்களிடம் எளிதாக பழகக் கூடியவர். மக்கள் பிரச்சினைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு வருபவர்.

He hails from the Dravidian tradition. As a Minister, he has been working with such dedication that he has earned widespread acclaim. He is easily approachable by the general public, and he listens to people's grievances, providing immediate solutions.

திராவிட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அமைச்சராக இருந்து பாராட்டு பெறக்கூடிய அளவுக்கு பணியாற்றி வருபவர். பொது மக்களிடம் எளிதாக பழகக் கூடியவர். மக்கள் பிரச்சினைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு வருபவர்.

திராவிட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அமைச்சராக இருந்து பாராட்டு பெறக்கூடிய அளவுக்கு பணியாற்றி வருபவர். பொது மக்களிடம் எளிதாக பழகக் கூடியவர். கீதா ஜீவன் : கனிமொழி எம்பி புகழாரம்..!

  தூத்துக்குடி. ஏப்ரல் :

            வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் காரியாலயம் திறப்பு விழா  நடைபெற்றது.

           காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் தலைமையில், திமுக வேட்பாளர் அமைச்சர் பெ.கீதா ஜீவன் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி புதிய தேர்தல் காரியாலயத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, அங்குள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

          இதனையடுத்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் கோவில் முன்பிருந்து பெ.கீதாஜீவன் தனது பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சார பயணத்தை தொடக்கி வைத்து கனிமொழி எம்பி பேசியதாவது : வருகிற சட்டமன்ற தேர்தலில் நமது வேட்பாளர் கீதாஜீவனை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த ஊரில் அவருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. உங்களுக்கு அவர் நன்றாகவே தெரியும். அதுபோல நீங்களும் அவருக்கு நன்றாக தெரியும். கலைஞர் அவர்களால் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமியின் மகளான இவர் திராவிட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அமைச்சராக இருந்து பாராட்டு பெறக்கூடிய அளவுக்கு பணியாற்றி வருபவர். பொது மக்களிடம் எளிதாக பழகக் கூடியவர். மக்கள் பிரச்சினைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு வருபவர். மற்ற மாவட்டங்களில் இருப்பவர்கள் எல்லாம் பொறாமைப்படும் அளவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக தூத்துக்குடியின் வளர்ச்சியை நாம் பார்த்து வருகிறோம். அவர்களுக்கு நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார். 

          முன்னதாக, பெ.கீதாஜீவன் பேசுகையில், "கனிமொழி எம்பி இந்த பிரச்சார பயணத்தை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதனை பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன். அவருக்கும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் தான் இருக்கிறது. எனவே நாம் அனைவரும் கண் துஞ்சாது இமை கொட்டாது பணிபுரிவோம். ஒவ்வொரு வாக்குகளாக உதயசூரியன் சின்னத்திற்கு பெற்றுத் தருவோமாறு உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்" என தெரிவித்தார். தொடர்ந்து, திமுக வேட்பாளர் கீதாஜீவன் திறந்த ஜீப்பில் நின்றவாறு போல் பேட்டை, ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், முத்தம்மாள் காலனி மற்றும் ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடையே வாக்குசேகரித்தார். 

          இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்த சேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மீராசா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.எம்.சகாயராஜ், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநகர செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் விமல் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.