தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்
demonstration-by-the-national-democratic-alliance-in-thoothukudi
தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி தமிழகத்தில் தொடா்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஓழுங்கு, சீர் கேடுகள், போதை பொருட்கள் பழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சாா்பில் நடைபெற்ற கண்டண ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான சண்முகநாதன் கடம்பூா்ராஜு எம்.எல்.ஏ ஆகியோா் தலைமை வகித்தனா்.
அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய பின் முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் நான்கரை ஆண்டுகாலம் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவழியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி நடைபெற்றது மீண்டும் அமைவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்று பேசினாா்.
முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசுகையில்... 200 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் அனைவரும் ஆர்ப்பாட்டத்தோடு கலைந்து செல்லாமல் கவனமாக தோ்தல் பணியாற்றி வெற்றி பெறவேண்டும். என்று பேசினாா்.
கடம்பூர் ராஜுஎம்.எல்.ஏ பேசுகையில்.. இந்தியாவில் 3வது பொிய கட்சியாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கினாா். அவரது வழியில் தமிழகத்தில் நல்லாட்சியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினாா். தோ்தல் நடைமுறை இன்னும் முழுமையாக அமுலுக்கு வரவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட திங்கள் கிழமை இரவு 12 மணிக்கு தான் அனுமதி கொடுத்துள்ளாா்கள். இந்தியா நள்ளிரவில் தான் சுதந்திரம் பெற்றது. அதே போல் இங்கும் நடைபெற்றுள்ளது. விளாத்திக்குளம் சம்பவத்தில் எஸ்பி அந்த பகுதியில் ஆய்வுக்கு வந்த போது சந்திப்பதற்கு சென்றோம். கடைசி வரை மக்கள் பிரதிநிதிகளான எங்களால் சந்திக்க முடியவில்லை இவா்களால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதிஅதற்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது. என்று பேசினாா்.
ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த முடிமண் ராமசாமி தோ்தலில் பதிவான வாக்குகள் மே 3ம் தேதி எண்ணப்படும் என்று பேசினாா். பின்னா் பேசிய கடம்பூா் ராஜு மே 4ம் தேதி தான் எண்ணப்படும் என்று பேசினாா். எந்த தேதியில் தான் எண்ணப்போகிறாா்கள். என்று பலா் விமா்சித்து கொண்டிருந்தனா்.
இதற்கிடையில் 12 கட்சிகளை கொண்ட கூட்டணியில் 6 கட்சியை சோ்ந்தவா்கள் மட்டுமே பேசினாா்கள் மற்றவா்கள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தொியவில்லை.
கூட்டணி கட்சியை சேர்ந்த ஓருவா் பேசுகையில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று பேசிய போது அவா்களது குடும்பத்திலேயே 3 போ் 3 கட்சியில் பொறுப்பில் உள்ளனா். இவரது விமா்சனம் எல்லாம் யாருக்காக என்ற நிலையும் அங்கு எழுந்தது. 12 கட்சி கூட்டணி தலைவா்கள் படம் இடம் பெற்ற டிஜிட்டல் போா்டில் 11 தலைவர்கள் படம் பாஸ்போா்ட் சைஸ் அளவிலும் டிடிவி தினகரனுக்கு மட்டும் பிரதமா் மோடி படத்திற்கு அடுத்தாற்போல் பொிய படங்கள் பொறிக்கப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஆா்ப்பாட்டத்திற்கு இடையில் அவ்வவ்போது பிஜேபி கட்சியினா் ஜெய்காளி கோஷங்களை எழுப்பி கொண்டே இருந்தனா். தற்போது அமைய பெற்றுள்ள கூட்டணிகளில் ஓருங்கிணைப்பு இல்லாத நிலை இருந்தது.
முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லாரன்ஸ், அம்மாமக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர்கள் ஜானியேல் சாலமோன் மனிராஜ், பொன்ராஜ், பூலோக பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் சுந்தா்ராஜ், சிவபெருமாள், மாநில நிா்வாகிகள் பாக்கிய செல்வன், சண்முககுமாாி, பொியசாமி, ஓன்றிய செயலாளா் சிவசுப்பிரமணியன், மற்றும் முத்துமாலை, அதிமுக முன்னாள் எம்பி நட்டா்ஜி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெருமாள் மோகன் சின்னப்பன் மாநில அணி நிா்வாகிகள் பெருமாள் சாமி ஹென்றி சின்னத்துரை, கிருஷ்ண ராதாகிருஷ்ணன் மாவட்ட அவைத்தலைவர் திருபாற்கடல் துணைச்செயலாளர் சந்தனம் இணைச்செயலாளர் சொினாபாக்கியராஜ் பொருளாளா் சேவியா் மாவட்ட அணி நிா்வாகிகள் சுதாகா் பிரபாகா் விக்னேஷ் துரைசிங், சந்திரன் தனராஜ் பெருமாள் ஜோதிமணி திருச்சிற்றம்பலம் டைகா் சிவா ஜீவாபாண்டியன், வக்கீல்கள் ராஜாராம் ஆண்ட்ரூமணி, ரவிந்திரன், பிள்ளைவிநாயகம் சரவணபெருமாள் முனியசாமி முன்னாள் மேயா் அந்தோணிகிரேஸ் பிஜேபி மாநில நிா்வாகிகள் ராஜகண்ணன், விவேகம் ரமேஷ், அசோகன் சுரேஷ்குமாா் மாவட்ட அணி நிா்வாகிகள் வக்கீல் சண்முகசுந்தரம் சிவராமன் வாாியாா் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளா் முத்துபாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டசெயலாளர் லாரன்ஸ், பாமக பரமகுரு, தமாக விஜயசீலன், அதிமுக ஓன்றிய செயலாளர்கள் காசிராஜன், சண்முகவேல், விஜயகுமாா், ஜவஹா் செம்பூர் ராஜ்நாராயணன், தாமோதரன், பகுதி செயலாளா்கள் முருகன், ஜெய்கணேஷ், சந்தனப்பட்டு, நிா்வாகிகள் கணேசன், கண்ணையா, மாாியப்பன், கேடிசி சங்கா், பாலஜெயம், சாம்ராஜ் சகாயராஜ், உள்பட கூட்டணி கட்சியை சோ்ந்த நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
tamilanda