தூத்துக்குடியில் முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

in-thoothukudi-welfare-assistance-was-distributed-to-1000-people-on-behalf-of-the-muslim-community-welfare-association

தூத்துக்குடியில் முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

     தூத்துக்குடி முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் 25வது ஆண்டாக முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி தெற்குப் புது தெருவில் நடைபெற்றது. முஸ்லிம் சமுதாய நல சங்க தலைவர் மைதீன் தலைமை தாங்கினார். ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலீம் இமாம் சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் இப்ராகிம் மூசா வரவேற்றுப் பேசினார். 

      நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை முன்னாள் தலைவர் மீராசா, ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை முன்னாள் செயலாளர் எம்எஸ்எப் ரகுமான் முன்னாள் துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், மாநில ஜமாத்துல் உலமா சபை மாநில பொருளாளர் அரசு காஜி முஜிபுர் ரகுமான், ஆகியோா் ஆயிரம் பேருக்கு சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் லோடு சைக்கிள், அரிசி, வேஷ்டி, சேலை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, என 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்கள். 

 நிகழ்ச்சியில் முஸ்லிம் சமுதாய சங்கத் பொருளாளர் சாகுல் ஹமீது, அர் ரஹ்மான் நற் சேவை முகமதுகுட்டி, மிராசா, அரபி, புர்கான் அலி, முகமது காசிம், அபுதாகிர், நூர்தீன், முகமது இஸ்மாயில், சாகுல் ஹமீது, முகமது சலீம், நஜிமுதீன், ராஜா முகமது, பீர்மைதீன், சம்சுதீன், செய்யது காசிம், அமீர், வழக்கறிஞர் அஜீஸ், அலி ஜாஸிம், முகமது அமீர்கான், அப்துல் சுகு ஐஸ்வர்யா கன்சிசன் பத்மநாதன் விவிடி மேனேஜர் ராஜேந்திரன் முருகானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜாமியா மஹல்லா முஸ்லிம் சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர் ஏகே மைதீன், செயலாளர் மூஸா பொருளாளர் சாகுல் ஹமீது, மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.