தமிழகம் முழுவதும் புத்தகக் கண்காட்சி - ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!
தமிழகம் முழுவதும் புத்தகக் கண்காட்சி - ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!
சென்னை:
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2026-2027 ஆம் ஆண்டில் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவதற்கு ரூ.8 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
*அரசாணை விவரம்:*
பள்ளிக்கல்வி (பொ.நூ.2) துறை அரசாணை (நிலை) எண்.166, நாள் 09.10.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது நூலக இயக்குநரின் கோரிக்கையை ஏற்று இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2022-2023 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த வருவாய் மாவட்டங்களை 3 வகையாக பிரித்து நிதி ஒதுக்கப்பட்டது. அதில் A வகை மாவட்டங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.17.50 லட்சம் வீதம் 7 மாவட்டங்களுக்கு ரூ.1,22,50,000/-, B வகை மாவட்டங்களுக்கு ரூ.14 லட்சம் வீதம் 7 மாவட்டங்களுக்கு ரூ.98,00,000/-, C வகை மாவட்டங்களுக்கு ரூ.12 லட்சம் வீதம் 23 மாவட்டங்களுக்கு ரூ.2,76,00,000/- என மொத்தம் ரூ.4,96,50,000/- நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக 2023-2024 மற்றும் 2024-2025 ஆண்டுகளிலும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2026-2027 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த நிரந்தர அனுமதியும், அதற்கான செலவினமான ரூ.8,45,00,000/- (ரூபாய் எட்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் மட்டும்) நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி 2026-2027 ஆம் ஆண்டு திருத்த வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
"2205 00 - கலையும் பண்பாடும் - 105 பொது நூலகங்கள் - மாநிலச் செலவினங்கள் - AA பொது நூலகங்கள் இயக்ககம் - 308 விளம்பரமும் பிரச்சாரமும் - 02 பொருட்காட்சி" என்ற கணக்குத் தலைப்பின் கீழ் இந்த செலவினம் மேற்கொள்ளப்படும்.
இந்த அரசாணை நிதித்துறையின் இசைவுடன் வெளியிடப்பட்டுள்ளதாக அரசு செயலாளர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
---
tamilanda