தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் - புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறை - கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம்!

தூத்துக்குடி, அக்.27:

தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை சார்பில், "நேர்மையே வளமை" (Probity for Prosperity) என்னும் தலைப்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 26 முதல் நவம்பர் 1-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு:

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி மற்றும் அனிதா டீம் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டு பயணிகள் மத்தியில் சிறப்புரையாற்றினர்.

கல்லூரி மாணவர்கள் நாடகம்:

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், காமராஜ் கல்லூரி NSS மாணவர்களை வரவழைத்து விழிப்புணர்வு நாடகம் நடித்துக் காட்டப்பட்டது.

"SAY NO TO CORRUPTION" என்ற பதாகையுடன் நடத்தப்பட்ட இந்த நாடகம், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்தது.

பொதுமக்கள் பாராட்டு:

லஞ்சம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். லஞ்சம் குறித்த புகார்களை 1064 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.