தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் – We the Leaders அமைப்பின் நிர்வாகி கோரிக்கை!
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் – We the Leaders அமைப்பின் நிர்வாகி கோரிக்கை!
தூத்துக்குடி: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியைச் சேர்ந்த We the Leaders அமைப்பின் நிர்வாகி ஆர். காசிலிங்கம், தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு வழங்கும் சம்பளத்தைப் போல உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைப் போல, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் உரிய சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
tamilanda