கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாள் - குருபூஜை விழா
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாள் - குருபூஜை விழா
தூத்துக்குடி:
இன்று (நவம்பர் 18, 2026) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாள் (குருபூஜை) தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் அனுசரிக்கப்படுகிறது.
1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி மறைந்த வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தொடங்கி ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரரும், வழக்கறிஞரும், எழுத்தாளருமாவார்.
அவரது தியாகத்தையும், தமிழுக்கும் தேசத்திற்கும் ஆற்றிய பணிகளையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் எழுச்சியுடன் குருபூஜை:
தூத்துக்குடியில் வ.உ.சி-யின் 90-வது குருபூஜை விழா, திமுக முன்னாள் நகர இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத் தலைவரும், தமிழ்நாடு வ.உ.சி பேரவை மாநில தலைவருமான *வி.கே.செல்வ மாரியப்பன்* தலைமையில் நடைபெற்றது.
இவர் தூத்துக்குடியில் கடந்த *25 ஆண்டுகளாக* வ.உ.சி குருபூஜையை தெய்வீக பணியாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த குருபூஜையில் மாலை அணிவித்து, ஐயரை அழைத்து வந்து முறைப்படி சடங்குகள் செய்து குருபூஜையை நடத்தி வருகிறார்.
விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு வ.உ.சி-யின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
tamilanda