தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

the-constituency-delimitation-bill-which-posed-a-threat-to-tamil-nadu-has-been-defeated-celebrations—marked-by-the-bursting-of-firecrackers-and-the-distribution-of-sweets—were-held-in-thoothukudi-under-the-leadership-of-minister-geetha-jeevan

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி தூத்துக்குடியில் அமைச்சா் கீதாஜீவன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

     தூத்துக்குடி தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதோடு இணைந்த மகளிா் இடஓதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்களுக்கும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன. இதனை வரவேற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றிருந்தாா். முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு கடுமையான எதிா்ப்பை தொிவித்து கருப்பு சட்டை அணிவித்து மசோதா நகலை எாித்தாா். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் வேட்பாளருமான கீதாஜீவன் தலைமையில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு வெற்றி முழக்கமிட்டனா் தமிழக மக்களுக்கு கிைடத்த வெற்றி மு.க.ஸ்டாலின் பெற்று தந்த வெற்றி என்டிஏ சதியை முறியடித்து பெற்ற வெற்றி அதிமுகவின் கூட்டாளியை தோற்கடித்துப் பெற்ற வெற்றி போராடினோம் ஓன்றாக வென்றோம். முறியடித்தோம் ஓன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியை முறியடித்தோம் காப்பாற்றினோம் தமிழ்நாட்டின் உாிமையை காப்பாற்றினோம். தொடரட்டும் தமிழ்நாட்டின் வெற்றி தொடரட்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடரட்டும் வீழ்த்துவோம் தமிழ்நாட்டைத் தாக்க வரும் டெல்லி அணிைய வீழ்த்துவோம் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம். என்டிஏ வை எதிா்த்து போராடுவோம் தமிழ்நாட்டின் உாிமையை என்றும் காப்போம். மக்களாட்சியை காப்போம் தமிழ்நாட்டின் வெற்றி தொடரட்டும் முக.ஸ்டாலின் முதல்வராக தொடரட்டும். என்று கோஷம் எழுப்பிய பின்னா் அமைச்சா் கீதாஜீவன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினாா். 

      நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநில பேச்சாளா் சரத்பாலா, பொதுக்குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா கஸ்தூாிதங்கம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமாா், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அணி நிா்வாகிகள் அருண்குமாா், பழனி, செல்வி, குபோ் இளம்பாிதி, சீனிவாசன், கவிதாதேவி, அருணாதேவி, பிரபு, நாகராஜன், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், முருகஇசக்கி, கிறிஸ்டோபா் விஜயராஜ், ரூபராஜா, ரெக்ஸ், செல்வலட்சுமி, ரவி, சங்கரநாராயணன், சந்தனமாாி, பிரவீன்குமாா், பெல்லா, டினோ, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்டச்செயலாளர்கள் சேகா், மனோ, பாலகுருசுவாமி, சுரேஷ்மகாராஜா, சந்தனமாாிமுத்து, சதீஷ்குமாா், பாலு, கவுன்சிலா்கள் சரவணக்குமாா், இசக்கிராஜா, கண்ணன், கந்தசாமி, ராமா், ஜெயசீலி, நாகேஸ்வாி, மற்றும் அற்புதராஜ், பாஸ்கா், மணி, அல்பட், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொருளாளர் வில்சன், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் வல்லரசு துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர துணைசெயலாளர் மாடசாமி, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளா் முகமது ஹசன், மாா்க்கிஸ்ட் மாநகர செயலாளர் முத்து, துணைச்செயலாளர் ஜாகிா்உசேன், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், கூட்டணி கட்சியை சோ்ந்த நிா்வாகிகள் நாராயணமூா்த்தி நக்கீரன் மகாராஜன், ராஜன், மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பலா் கலந்து கொண்டனா்.