பாரத் மக்கள் முற்போக்கு முன்னணி கழகம் தூத்துக்குடியில் தொடக்க விழா : திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு முழு ஆதரவு
bharat-makkal-murpokku-munnani-kazhagam-inauguration-in-thoothukudi-full-support-extended-to-dmk-candidate-geetha-jeevan
பாரத் மக்கள் முற்போக்கு முன்னணி கழகம் தூத்துக்குடியில் தொடக்க விழா : திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு முழு ஆதரவு தூத்துக்குடி ஏப்ரல் 4 :தமிழகத்தில் புதிய கட்சி தொடக்கம் விழா தூத்துக்குடி முனியசாமிபுரம் இரண்டாவது தெருவில் நடந்தது. விழாவில் கட்சி கொடி கருப்பு, மஞ்சள், பச்சை மூவர்ண கொடியானது அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் சாதிகள் பெயரில் பல வன்கொடுமைகள், வன் செயல்கள், நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவை தடுக்கப்பட வேண்டும். கடுமையான சட்டங்களை இயற்றி தண்டனை வழங்க வேண்டும் என்று இக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பாரதி நல்லையா செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது.. சாதிய வன்கொடுமைகள் அகல வேண்டும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இது குறித்து கடுமையான சட்டங்கள் இயற்றி பெண்களை பாதுகாக்க எமது கட்சி குரல் கொடுக்கும். மேலும் கௌரவ கொலைகள் நடப்பதை தடுக்க வழக்கு தொடுக்கப்படும். இளைஞர்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும். காதல் திருமணங்கள் நடக்க இந்த கட்சி உறுதுணையாக இருக்கும். சமுதாயம் நிம்மதியாக இருக்கவும், சாதிய வன்முறைகளை களைந்திடவும் பாடுபடும். தமிழன் என்ற சான்று போதும், எந்த சாதி என்று அரசு கேட்கவும் வேண்டாம், அனைவரும் ஒரே சாதிதான் என்பதை நிலை நிறுத்த எமது கட்சி கொள்கையுடன் செயல்படும். இதில் இணைய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 94 87 95 44 60, இந்த தொடக்க விழாவில் மாநிலத் தலைவர் எம் ராஜ், பொருளாளர் துர்கா தேவி, தென்காசி மாவட்ட செயலாளர் ராஜ், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ் காமராஜ், நெல்லை மாவட்ட செயலாளரும் பொதுக்குழு தலைவருமான என் நம்பிராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எம் விநாயகம், தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் கோபால் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் திமுக கட்சிக்கு ஆதரவாக செயல்படுவோம், தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்காக வாக்குகளை சேகரிப்போம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி நல்லையா.
tamilanda