இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.
இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் கள ஆய்வுக்குழு நியமிக்கபட்டு, தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் கோவில்பட்டி தொகுதிகளில் கள ஆய்வுக்குழு கருத்து கேட்பை நடத்திய நிலையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி கள ஆய்வுக்கான கலந்துரையாடல் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் தலைமை வகித்து பேசுகையில் நடந்து முடிந்த சட்டசபை தோ்தலில் தூத்துக்குடி தொகுதி குறித்து கள ஆய்வு குழுவினாிடம் தங்களது கருத்துக்களை நேரடியாகவும் எழுத்துபூா்வமாகவும் வழங்கலாம் இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்று குழுவினரை வரவேற்று பேசினாா்
சிறப்பு விருந்தினராக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, திமுக மாநில அயலக அணி துணைச் செயலாளர் சேலம் உமாராணி ஆகியோா் கருத்துக்களை கேட்டறிந்தனா்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, துணை மேயர் ஜெனிட்டா, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன் மாநில சிறுபான்மையினர் அணி துணைச் செயலாளர் பொன்சீலன், தலைமை பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பாலகுருசுவாமி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர்இளம்பரிதி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பொறியாளர் அணி துணை அமைப்பாளா் ஜான்சன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோசப் அமல்ராஜ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன் நிர்மல்ராஜ், ஜெயக்குமார் ராமகிருஷ்ணன் சுரேஷ்குமார் மேகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாி தங்கம், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், ராஜ்குமாா், சுரேஷ், செல்வக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், அயலக அணி அமைப்பாளா் கிறிஸ்டோபர் விஜயராஜ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வின், ரவி, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, ரெக்ஸ், வட்டச் செயலாளர்கள் சுப்பையா, சேகா், பொன்ராஜ், ரவிச்சந்திரன், பெருமாள் கோவில்அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, பிரபாகா், ஆவுடையப்பன், அல்பட், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பகுதி பிரதிநிதிகள், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை ஆய்வு குழுவிடம் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.
tamilanda