தமிழக அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருது - தூத்துக்குடி மோ.அன்பழகனுக்கு வழங்கப்பட்டது

தமிழக அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருது - தூத்துக்குடி மோ.அன்பழகனுக்கு வழங்கப்பட்டது

தமிழக அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருது - தூத்துக்குடி மோ.அன்பழகனுக்கு வழங்கப்பட்டது

சென்னை, நவ.03:

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசின் 2024, 2025-ம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுகள் வழங்கும் விழா சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு இராசுமோகன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் *முத்துநகர் திருக்குறள் தூதர் மோ.அன்பழகன்* அவர்களுக்கு *2024-ம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது* வழங்கப்பட்டது.

மேலும் விழாவில் எல்லைப் போராட்ட வீரர்களுக்கு கூடுதல் உதவித்தொகை, நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கான உரிமைத்தொகை மற்றும் திருக்குறள் முற்றோதல் செய்த 179 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.15,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வன்னியரசு, விஜயலெட்சுமி மற்றும் இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி, பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் இராசாராமன் (இ.ஆ.ப), இயக்குனர் அவ்வை அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.