தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

தூத்துக்குடி, அக்.21:

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காவல் நிலையத்தில் இன்று (21.10.2026) காவலர் வீர வணக்க நாள் நிகழ்வு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத் தலைமையில் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் வீரமரணம் அடைந்த அனைத்து காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் எஸ்.பி  ரா. சிவ பிரசாத், தன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

---

*மேலும் செய்திகளுக்கு: http://www.onetamilnews.com*

*#OneTamilNews #Thoothukudi #PoliceDay*