விதை விதைத்து, திட்டங்களை உருவாக்கியது ரியல் திமுக திறப்பு விழா நடத்துவது ரீல்ஸ் தவெக முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை

விதை விதைத்து, திட்டங்களை உருவாக்கியது ரியல் திமுக திறப்பு விழா நடத்துவது ரீல்ஸ் தவெக முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை

விதை விதைத்து, திட்டங்களை உருவாக்கியது ரியல் திமுக திறப்பு விழா நடத்துவது ரீல்ஸ் தவெக முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை

       தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது விதை விதைத்து, திட்டங்களை உருவாக்கியது ரியல் திமுக திறப்பு விழா நடத்துவது ரீல்ஸ் தவெக. 2021 முதல் 2026 வரை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தூத்துக்குடி தொகுதியில் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு திறப்பு விழா நடத்தி, சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறது தவெக திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு, தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக அமைச்சர்கள் திறப்பு விழா நடத்தலாம் ஆனால், வரலாற்றை மாற்றி எழுத முடியாது தங்கம்மாள்புரம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா அய்யன்கோவில் தெருவில் புதிய எரிவாயுத் தகனமேடைக் கட்டடத் திறப்பு விழா டைமண்ட் காலனி எப்சிஐ குடோன் பகுதியில் பக்கவாட்டுச் சுவர் மற்றும் பாலம் அமைக்கும் பணி கந்தன் காலனியில் பக்கிள் ஓடை மேம்பாட்டுப் பணிகள் சீரமைக்கப்பட்ட கோக்கூர் குளத்தின் திறப்பு விழா குரூஸ்புரத்தில் பக்கிள் ஓடை மேம்பாட்டுப் பணிகள் செயின்ட் மேரிஸ் காலனியில் புதிதாகக் கட்டப்பட்ட பூங்காவின் திறப்பு விழா சிறுபாடு கிராமத்தில் நியாயவிலைக் கடை மாப்பிள்ளையூரணி ஊராட்சியில், ஹவுசிங் போர்டு காலனியில் அங்கன்வாடிக் கட்டிடம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில், திரேஸ் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் அங்கன்வாடிக் கட்டிடம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில், சுனாமி காலனியில் அங்கன்வாடிக் கட்டிடம் குருக்குச்சாலை அரசு பள்ளி வளாகத்தில் சமையலறைக் கட்டிடம் தூத்துக்குடி மாவட்டம், படர்ந்தபுளியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு இவை அனைத்தும் திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காகச் செயல்படுத்தப்பட்ட பணிகள் அடிக்கல் நாட்டியது யார்? நிதி ஒதுக்கியது யார்? பணிகளை முன்னெடுத்தது யார்? திட்டமிட்டது திமுக! நிதி ஒதுக்கியது திமுக! பணிகளை முன்னெடுத்தது திமுக! ஆனால், திறப்பு விழா நடத்திவிட்டு, அந்தச் சாதனைகளைத் தங்களின் சாதனைகளாகக் காட்டிக்கொள்வது தவெகவா? திட்டங்களுக்கு யார் வேண்டுமானாலும் திறப்பு விழா நடத்தலாம். ஆனால், அந்தத் திட்டங்களுக்காக உழைத்தவர்களின் பங்களிப்பை மறைத்துவிட்டு, வரலாற்றைத் தங்களுக்குச் சாதகமாக எழுதிவிட முடியாது திமுக ஆட்சியில் உருவான திட்டங்களுக்குத் திறப்பு விழா நடத்திவிட்டு, அவற்றைத் தங்களின் சாதனைகளாக விளம்பரப்படுத்திக் கொள்வதும், சுயதம் பட்டம் அடித்துக் கொள்வதும் தவெகவின் அரசியல் பாணியாக இருக்கலாம். ஆனால், தூத்துக்குடி மக்கள் உண்மையை அறிவார்கள் ரிப்பன் வெட்டியதால் மட்டுமே ஒருவர் ஒரு திட்டத்தின் சாதனைக்குச் சொந்தக்காரராகிவிட முடியாது உண்மையான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் யார் என்பதைத் தூத்துக்குடி மக்கள் நன்கு அறிவார்கள் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.