செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்ச்சி! PMY திட்டத்தில் 915 வீடுகள் மாயம்! 7 ஆண்டுகளாக போராடியும் நடவடிக்கை இல்லை - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சீட்டாவின் நிறுவனர் லஞ்ச ஒழிப்பு பாபு எச்சரிக்கை

செங்கல்பட்டு, அக்.27:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய முறைகேடு அம்பலமாகியுள்ளது.

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 54 ஊராட்சிகளில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY - PMY) திட்டத்தின் கீழ் அரசு கணக்கில் கட்டப்பட்டதாக காட்டப்பட்ட 915 வீடுகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

7 ஆண்டுகளாக போராட்டம்:

காணாமல் போன இந்த 915 வீடுகளை கண்டுபிடித்து தரக்கோரி கடந்த 7 வருடங்களாக புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு காரணமான,

- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள்

- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்கள்

- உதவி திட்ட இயக்குனர்கள் (PMAY வீடுகள் பிரிவு)

- மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சி வளர்ச்சி பிரிவு)

- உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்)

- திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO)

ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

*8,136 வீடுகள் கணக்கு? - லஞ்ச ஒழிப்பு பாபு எச்சரிக்கை:*

இது குறித்து சீட்டாவின் (CITA) நிறுவனர் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் காணாமல் போன 915 வீடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் PMAY திட்டத்தில் காணாமல் போன 8,136 வீடுகளையும் கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளிக்க வேண்டிய நிலை உருவாகும்" என அவர் எச்சரித்துள்ளார்.

ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த வீடு கட்டும் திட்டத்தில் இத்தகைய முறைகேடு நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.