பொட்டலூரணியை சுற்றி தீ நாற்றம் வீசும் 3 கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 912 நாட்களாக தொடர் போராட்டம் - முதலமைச்சருக்கு போராட்டக்குழு கோரிக்கை!

தூத்துக்குடி, நவ.11:

பொட்டலூரணியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள, மூச்சுத் திணறும் அளவிற்குத் தீ நாற்றம் வீசி சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்து வரும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி, ஐந்து ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், 912 நாட்களாகத் தொடர் போராட்டமாகப் போராடி வருவதாக கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போராட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த அரசால் அனுமதிக்கப்பட்ட இந்த நிறுவனங்களை இப்போதைய அரசு மூடி மக்களை மூச்சுவிட வைக்க வேண்டும்.

மேலும், போராடும் பொட்டலூரணி மக்கள் மீது கடந்த அரசால் 2021 - 2026 காலகட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை, பரந்தூர், மேல்மா வழக்குகளைப் போல் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சரை வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.