தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர மழை நிலவரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர மழை நிலவரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர மழை நிலவரம்!

*தூத்துக்குடி:* தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (19/10/2026 காலை 6.30 மணி முதல் 20/10/2026 காலை 6.30 மணி வரை) *மொத்தம் 50.00 மி.மீ மழை* பதிவாகியுள்ளது. *சராசரி மழையளவு 2.63 மி.மீ - லேசான மழை* என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

*அதிக மழை பெய்த இடங்கள்:*

- *காயல்பட்டினம் (திருச்செந்தூர் தாலுகா) - 25.50 மி.மீ - மிதமான மழை* ⛈️

- *கோவில்பட்டி - 10.00 மி.மீ - லேசான மழை

- *கடம்பூர் (கயத்தார்) - 6.50 மி.மீ - லேசான மழை*

- *சுரங்குடி (விளாத்திகுளம்) - 6.00 மி.மீ - லேசான மழை*

- *ஒட்டப்பிடாரம் - 2.00 மி.மீ - மிக லேசான மழை*

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், குலசை, சாத்தான்குளம், கழுகுமலை, கயத்தாறு, எட்டையாபுரம், விளாத்திகுளம், கடல்குடி, வைப்பாறு, மணியாச்சி, வேதநத்தம், கீழாரசடி உள்ளிட்ட 14 இடங்களில் மழை இல்லை.

*சேத அறிக்கை:*

வீடுகள் சேதம், கால்நடைகள் இழப்பு, மனித உயிரிழப்பு மற்றும் காயம் என எந்த பாதிப்பும் இல்லை (0) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*வானிலை முன்னறிவிப்பு (IMD):* மாவட்டம் முழுவதும் *மிதமான மழை (15.6 முதல் 64.4 மி.மீ)* பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.