பாலையாபுரம் பர்னிச்சர் கம்பெனியில் டெங்கு கொசுப்புழுக்கள் - ரூ.10,000 அபராதம்!

பாலையாபுரம் பர்னிச்சர் கம்பெனியில் டெங்கு கொசுப்புழுக்கள் - ரூ.10,000 அபராதம்!

பாலையாபுரம் பர்னிச்சர் கம்பெனியில் டெங்கு கொசுப்புழுக்கள் - ரூ.10,000 அபராதம்!

*தூத்துக்குடி (20-10-2026):* தூத்துக்குடி மாநகராட்சி பாலையாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பர்னிச்சர் கம்பெனியில் இன்று காலை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்த நிறுவன வளாகத்தில் டெங்கு தொற்றுநோயை பரப்பக்கூடிய ஏடிஸ் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், குப்பைகளை பொதுவெளியில் கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, மேற்படி கம்பெனி உரிமையாளருக்கு *ரூ.10,000 அபராதம்* விதிக்கப்பட்டது.

மேலும், வளாகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என *பொது சுகாதார சட்டப்படியும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் படியும்* நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தூத்துக்குடி மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*#Thoothukudi #ThoothukudiCorporation #Dengue #Fine #Palaiyapuram #OneTamilNews*