தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அனுமதியின்றி பாதாள சாக்கடை தோண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி - காங்கிரஸ் பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் புகார்
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அனுமதியின்றி பாதாள சாக்கடை தோண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி - காங்கிரஸ் பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் புகார்
தூத்துக்குடி, நவ.18:
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தெற்கு கடற்கரை சாலையில் (South Beach Road), எல்.ஆர்.எம் ஹோட்டல் அருகில் உள்ள பகுதியில், தனியார் நபர்கள் சிலர் உரிய அரசாங்க அனுமதியின்றி, சாலையை தோண்டி குழாய் ராட்சஷ பைப் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் B.J. புல்டன் ஜெசின் அவர்கள், தென்பாகம் காவல் நிலைய உயர்திரு காவல் ஆய்வாளர் அவர்களிடம் இன்று (18.11.2026) எழுத்துப்பூர்வ புகார் மனு அளித்துள்ளார்.
*மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:*
நன்னிலையில் நடைபெற்ற இச்செயலால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பொதுச் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறும், விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும் இது தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம், 2001-ன் கீழ் சட்டவிரோதமான செயலாகும்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் அவர்கள், அப்பகுதி வழியாக செல்லும் போது எந்தவித அனுமதியும் இல்லாமல் துணிகரமாக நெடுஞ்சாலை துறை சாலையை சேதப்படுத்தியதை நேரில் கண்டுள்ளார். இச்செயலில் 5 நபர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அவர்களிடம் நெடுஞ்சாலை துறை சாலையை தோண்டுவதற்கு உரிய அனுமதி வைத்துள்ளீர்களா என கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதோடு மட்டுமல்லாமல், எங்களிடம் எந்த அனுமதி கடிதமும் இல்லை, எங்களை குருசப்புரம் திமுக கவுன்சிலர் கணவர் டேனியல் என்பவர் சாலையை தோண்டச் சொன்னார், அதனால் சாலையை தோண்டினோம் என்று விளக்கமளித்துள்ளனர்.
உடனே இது குறித்து வார்டு கவுன்சிலர் அவர்களுக்கு தகவல் தெரிவித்தவுடன், மேற்கண்ட பணிகளை செய்து வந்த நபர்கள், அவசர அவசரமாக குழிவெட்டு செல்வதற்கு அமைத்த பைப்களை உருவி எடுத்துவிட்டு, மேலே மண்ணை கொண்டு மூடிவிட்டு ஓடிவிட்டனர். இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்லும் போது எந்நேரத்திலும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
*கோரிக்கை:*
எனவே, சேதப்படுத்திய சாலையை முறைப்படி சீர்செய்யவும், பொதுச் சொத்தைச் சேதப்படுத்திய சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அவர்களை தூண்டியவர்கள் மீதும், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் (TNPPDL Act) கீழ் உரிய அபராதம் விதித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்த சாலையை அவர்களின் செலவிலேயே உடனடியாக சீரமைக்க உத்தரவிடுமாறும் பொதுநலன் கருதி தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இத்துடன் சேதப்படுத்தப்பட்ட சாலையின் புகைப்படங்களை ஆதாரமாக இணைத்துள்ளார்.
tamilanda