நாகர்கோவிலில் தேசிய சமூகநீதி விருது 2026 விழா கோலாகலம்! 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவம்

நாகர்கோவிலில் தேசிய சமூகநீதி விருது 2026 விழா கோலாகலம்! 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவம்

நாகர்கோவிலில் தேசிய சமூகநீதி விருது 2026 விழா கோலாகலம்! 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவம்

*நாகர்கோவில், நவ.4:

சட்ட உரிமைகள் கழகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேசிய சமூகநீதி விருது 2026 விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சமூக நீதிக்காகவும், பொதுமக்களின் சட்ட உரிமைகளுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் வழக்கறிஞர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேரில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுச் சிறப்பித்தனர்.

விழாவிற்கு சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் *Dr. S.R. செல்வம் கிறிஸ்டோபர்* தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் *Dr. J.S. ஜெகன்*, தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினரும் இணைத் தலைவருமான *மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு*, மண்டல தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் *சந்துரு* ஆகியோர் கலந்துகொண்டு வழக்கறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் *சேவியர் பிச்சை*, திருநெல்வேலி மண்டல இளைஞரணித் தலைவர் *சகாயராஜ்*, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த செயலாளர் *ஆரோக்கிய அருள் ராஜ்*, விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த செயலாளர் *பிரின்ஸ்*, இராமநாதபுரம் மண்டலத் துணைத் தலைவர் *தங்கப்பாண்டி*, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் *ராஜா சிங் வேலாயுதம்*, ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் *சாஸ்தா சிவா*, மாநிலத் துணைத் தலைவர் *V.M. சுப்பையா*, மாநிலத் துணைச் செயலாளர் *S. பேச்சிமுத்து*, தூத்துக்குடி மாவட்டத் துணைச் செயலாளர் *சுடலைமுத்து* ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இவர்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்ட உரிமைகள் கழக நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

விழாவில் பேசிய நிர்வாகிகள், சமூகநீதியை நிலைநாட்டுவதில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவிகள் கிடைக்க சட்ட உரிமைகள் கழகம் தொடர்ந்து பாடுபடும் என்றும் தெரிவித்தனர்.