நெகிழ்ச்சி! மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக உலக சாதனை முயற்சி - தூத்துக்குடி இளைஞர் 5 மணி நேரத்தில் 1000 Pull-ups, 1000 Squash Drives
???? ONE TAMIL NEWS | தூத்துக்குடி
#நெகிழ்ச்சி! மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக உலக சாதனை முயற்சி - தூத்துக்குடி இளைஞர் 5 மணி நேரத்தில் 1000 Pull-ups, 1000 Squash Drives!
#தூத்துக்குடி: மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நிதி திரட்டும் உயரிய நோக்கத்திற்காக, தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் *J.ஜோஷ்வா வசிகரன்* உலக சாதனை முயற்சியில் ஈடுபட உள்ளார்.
சாதனை என்ன? 5 மணி நேரத்திற்குள் 1,000 Pull-ups மற்றும் 1,000 Squash Drives* செய்து உலக சாதனை படைக்க உள்ளார். இந்த சாதனை முயற்சி *Cholan Book of World Records (CBWR)* மற்றும் *International Achiever Book of World Records*-ல் பதிவு செய்யப்பட உள்ளது.
*நிகழ்வு விவரம்:*
- *தேதி:* 02-11-2026 (வரும் ஞாயிறு)
- *நேரம்:* காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை
- *இடம்:* GAMESVILLE ACADEMY, முத்தம்மாள் காலனி, தூத்துக்குடி.
இந்த நிகழ்வை *gamesvillethoothukudi* என்ற Instagram பக்கத்தில் நேரலையாக (Live) காணலாம். GAMESVILLE நிறுவனம் சார்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடல் மற்றும் மன ரீதியாக சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்காக நிதி திரட்டும் இந்த இளைஞரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#Thoothukudi #WorldRecordAttempt #GamesVille #JoshwaVasikaran #Pullups #Squash #OneTamilNews #ThoothukudiNews
tamilanda