தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொட்டும் மழையில் மழை நீர் ஓடையில் சீராக செல்கிறதா மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொட்டும் மழையில் மழை நீர் ஓடையில் சீராக செல்கிறதா மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மேட்டுப்பட்டி முகத்துவாரம் திரேஸ்புரம் முகத்துவாரம் ஆகிய இடங்களில் பக்கிள் ஓடை வழியாக மழை நேர சீராக செல்கிறதா? எங்கேயாவது மழைநீர் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து கண்காணித்து வந்தார் எந்த ஒரு இடத்திலும் மழை நீர் அடைப்பு ஏற்படவில்லை மழை நீர் சீராக செல்கிறது அதுபோல பழைய மாநகராட்சி அலுவலகம். எட்டையாபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் வடிகால் வழியாக மழைநீர் எங்கும் தேங்குகிறதா சீராக செல்கிறதா என்று கொட்டும் மழையில் தொடர்ந்து ஆய்வு செய்தாா். அதுபோல கோக்கூா் பகுதியில் உள்ள மழை நீா் வௌியேற்றும் மின்மோட்டாா் அறை, அங்குள்ள குளத்தின் நீாின் அளவையும் பாா்வையிட்டாா். சங்கரபேரி. பி என் டி காலனி. ஆசிாியா் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாய்களில் மழை நீர் எவ்வாறு செல்கிறது என்று கண்காணித்து வருகிறார் மாநகர மக்கள் மழைக்காலத்தில் எந்த விதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை தொடர்ந்து மழைநீர் பக்கிள் ஓடை மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் சீராக மழை நீர் செல்கிறது அது போல பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷனும் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து கழிவுநீர் சீராக செல்கிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உடன் பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனியல். போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பார், பிரபாகர் உள்பட பலா் உடனிருந்தனா்.
tamilanda