தூத்துக்குடியில் விஜய் கூட்டணிக்கு எதிா்ப்பு தொிவித்து கட்சி பதவியை ராஜினமா செய்தாா் காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ்

தூத்துக்குடியில் விஜய் கூட்டணிக்கு எதிா்ப்பு தொிவித்து கட்சி பதவியை ராஜினமா செய்தாா் காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ்

தூத்துக்குடியில் விஜய் கூட்டணிக்கு எதிா்ப்பு தொிவித்து கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யவில்லை ஆனால் வருமானம் வராத கட்சி பதவியை ராஜினமா செய்தாா் காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ்

     தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டப்பேரவை தோ்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தோ்தல் முடிவில் யாருக்கும் தனி மெஜாாிட்டி கிடைக்காதநிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தொிவித்தற்கு எதிா்ப்பு தொிவித்து தூத்துக்குடி 34வது வாா்டு மாமன்ற உறுப்பினா் சந்திரபோஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வம் பெருந்தகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நான் கடந்த 1988 முதல் காங்கிரஸ் கட்சியில் ேசா்ந்து பணியாற்றி வந்தேன் நான் தூத்துக்குடியில் 1996ம் ஆண்டு முதல் தூத்துக்குடி நகா்மன்ற உறுப்பினராகவும் பின்பு மாமன்ற உறுப்பினராகவும் கடந்த 30 ஆண்டுகளாக தொடா்ந்து பணியாற்றி வருகின்றேன். திமுக கூட்டணி சாா்பாக இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சி சாா்பாக தனித்து 3 முறையும் மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறேன் மேலும் காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். மாநகராட்சி காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும் இருந்து வருகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ராகுல்காந்தியின் தவறான வழிகாட்டுதலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறான வழிகாட்டுதலாலும் இந்த முடிவை நான் எடுக்கிறேன். எனது மாநகராட்சி கவுன்சிலா் பதவியை தவிர எனது அனைத்து பதவிகளையும் ராஜினமா செய்கிறேன்.பதவிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன் என்று இக்கடிதத்தில் கூறியுள்ளாா்.