தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தேவர் 119வது ஜெயந்தி விழா! மாவட்ட தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தலைமை தாங்கி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தேவர் 119வது ஜெயந்தி விழா! மாவட்ட தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தலைமை தாங்கி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி, அக்.30:
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், தூத்துக்குடி மூன்றாவது மைலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தலைமை தாங்கி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர்கள் பெத்துராஜ், A.X. ஜேம்ஸ் லாரன்ஸ், மாவட்ட பொதுச் செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞான திரவியம், தூத்துக்குடி ஒன்றிய தலைவர் முருகன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ஆறுமுகசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் அனிதா,மண்டல தலைவர்கள் வசந்தகுமார், வேலு, முருகேசன், சித்ரபுத்திரன், காளிதாஸ், ஜெயமணி சுரேஷ், புதியம்புத்தூர் நகர தலைவர் துரைமணி, ஓட்டப்பிடாரம் 18வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மொட்டைச்சாமி, நேரு, சண்முகம், தனசேகர், சுப்பையா, மனோஜ், கே. ராமசாமி, எஸ். ராமசாமி, முனியசாமி, பாலன், பாலா, மாணவரணி பிரபு, மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
tamilanda