தூத்துக்குடியில் "Chutties for Cities - 2026" - குழந்தைகள் உற்சாக பங்கேற்பு!
தூத்துக்குடியில் "Chutties for Cities - 2026" - குழந்தைகள் உற்சாக பங்கேற்பு!
தூத்துக்குடி, நவ.12:
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் "Chutties for Cities - 2026" நிகழ்வில் குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
இன்று (11.11.2026) மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் 120 மாணவ, மாணவிகளும், ஓவியப் போட்டியில் 250 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்னும் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து போட்டிகளின் இறுதி நிகழ்வு 14.11.2026 அன்று முத்து நகர் கடற்கரை பூங்காவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மேயர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
*நடைபெற உள்ள 5 போட்டிகள் விவரம்:*
*1. சுவர் ஓவியங்கள் போட்டி (Wall Painting / Mural Art)*
நகரின் அடையாளங்கள், இயற்கை வளங்கள், பசுமை, திடக்கழிவு மேலாண்மை, டெங்கு ஒழிப்பு, நீர் பாதுகாப்பு, நெகிழிக்கு மாற்று, நான்கு வண்ண குப்பைத் தொட்டி மற்றும் மழைநீர் சேகரிப்பு ஆகிய தலைப்புகளில், மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். பங்கேற்க விரும்புவோர் healthsection2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம்.
*2. வழக்காடு மன்றம் (Debate Competition)*
14.11.2026 அன்று மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற உள்ளது. "குப்பையை பிரிக்க வேண்டியது - மக்களா? மாநகராட்சியா?" என்ற தலைப்பில் நடைபெறும். இதற்கான முன்தேர்வு 13.11.2026 அன்று மதியம் 2.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும். வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.
*3. மாறுவேடப் போட்டி (Fancy Dress)*
14.11.2026 அன்று மாலை 05.30 மணி முதல் 06.00 மணி வரை முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற உள்ளது. LKG முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் கலந்து கொள்ளலாம். குப்பை தரம் பிரித்தல், டெங்கு / கொசு ஒழிப்பு, பசுமை தேவதை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம் மற்றும் நெகிழி பாதிப்பு ஆகிய தலைப்புகளில் மாறுவேடம் அணிந்து கலந்து கொள்ளலாம்.
*4. வாசகப் போட்டி (Slogan / Catchphrase)*
திடக்கழிவு மேலாண்மை, டெங்கு / கொசு ஒழிப்பு, மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, துணிப்பை பயன்பாடு, இயற்கை வளங்கள், குடிநீர் சிக்கனம், நெகிழி ஒழிப்பு மற்றும் கழிவும் வளமும் ஆகிய தலைப்புகளில் வாசகங்களை healthsection2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
*5. கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் போட்டி*
குப்பை தரம் பிரித்தல் உத்திகள், நெகிழிக்கு மாற்று, பசுமை பரப்பு அதிகரிப்பு, தூய்மை - தொலைநோக்கு பார்வை மற்றும் தூய்மை பணிகளில் மாணவர்கள் பங்கேற்பு ஆகிய தலைப்புகளில் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை healthsection2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு கிழக்கு மண்டலம் 98425 30292, தெற்கு மண்டலம் 94435 28621, வடக்கு மண்டலம் 80563 47075, மேற்கு மண்டலம் 94436 10511 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
tamilanda