தூத்துக்குடியில் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மனு பெறும் முகாம் - லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு

தூத்துக்குடியில் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மனு பெறும் முகாம் - லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு

தூத்துக்குடியில் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மனு பெறும் முகாம் - லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு லஞ்ச ஒழிப்பு ப.பாபு என அழைக்கப்படும் ப.பாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை 09/08/2026 அன்று அவர் குழுவாக தூத்துக்குடி வர உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு பணியாளர்கள் செய்ய வேண்டிய கடமையை செய்வதற்காக லஞ்சம் கொடுத்தவர்கள், அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் கடிதமாக புகார் கொடுக்கும் பட்சத்தில், அந்த புகாரில் 90% உண்மை இருப்பதாக சீட்டாவின் சிறப்பு தனிக்குழு விசாரணையில் தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், லஞ்சம் வாங்கிய அதிகாரியின் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கும், தமிழக அரசின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை இயக்குநர் மற்றும் தமிழக முதல்வரின் சிறப்பு செயலாளருக்கும் மனுவின் உண்மைத் தன்மையை எடுத்துக் கூறி, மனுதாரர் லஞ்சமாக கொடுத்த பணத்தை எந்தவொரு செலவும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து திருப்பி வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

*மனு பெறும் இடம் மற்றும் நேரம்:**நாள்:* 09/08/2026 ஞாயிற்றுக்கிழமை *நேரம்:* காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

*இடம்:* ராஜ் இல்லம், முத்தையாபுரம், தூத்துக்குடி.

இதற்கான சீட்டாவின் சிறப்பு குழு அங்கு முகாமிட்டு லஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து மனுக்களை பெறும்.

இவண்,

ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு,

சேர்மேன், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் (சிறப்பு திட்டம்), சீட்டா.

தொடர்புக்கு: 6369782068

---